தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 5 mei 2013

சர்வதேச நியமங்களை பின்பற்ற இலங்கைக்கு பிரித்தானியா அழுத்தம் கொடுக்க வேண்டும் - டக்ளஸ் அலக்சான்டர்


சர்வதேச நியமங்களை பின்பற்றுவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு பிரித்தானியா அழுத்தம் கொடுக்க வேண்டுமென பிரித்தானியாவின் நிழல் வெளிவிவகார அமைச்சர் டக்ளஸ் அலக்சான்டர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் சர்வதேச வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை கருவியாகப் பயன்படுத்தி பிரி;த்தானியா இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் சகல தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற சுயாதீன சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென பிரதமர் கமரூன் வலியுறுத்த வேண்டுமென அலக்சான்டர் கோரியுள்ளார்.

மனித உரிமை நிலைமைகளை மேம்பாடு ஏற்படாவிட்டால் அமர்வுகளில் பங்கேற்கப் போவதில்லை என அறிவிப்பதன் மூலம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


Geen opmerkingen:

Een reactie posten