தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 3 mei 2013

அசாத் சாலி சிறையில் உண்ணாவிரதப் போராட்டம்?- இனவாதத்தை தூண்டியமைக்காக கைது செய்யப்பட்டார்- அரசாங்கம்!


கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம் தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி சிறையில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது உறவினர்கள் நேற்று இதனைத் தெரிவித்துள்ளனர். தாங்கள் கொண்டு சென்ற உணவையும், காவற்துறையினரால் வழங்கப்பட்ட உணவையும் அவர் ஏற்க மறுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டதாக தெரிவித்து, அசாத் சாலி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இந்த வாரம் பொதுபல சேனா அமைப்புக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய திட்டமிட்டிருந்த நிலையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
இதேவேளை பொதுபல சேனா அமைப்பு தொடர்ர்பில் நேற்று கருத்து வெளியிட்டிருந்த பாதுகாப்பு அமைப்பின் பேச்சாளர் லக்ஸ்மன் உலுகல்ல, அந்த அமைப்பு சமூகங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்தும் வகையில் நடந்துக் கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டமை, இனவாதத்தை தூண்டியமைக்காக அசாத் சாலி கைது செய்யப்பட்டார் – அரசாங்கம்
அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டமை மற்றும் இனவாதத்தை தூண்டியமை ஆகியவற்றுக்காக அசாத் சாலி கைது செய்யப்பட்டார் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தக் கூடிய வகையில் அசாத் சாலி செயற்பட்டதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹுலுகல்ல தெரிவித்துள்ளார்.
அசாத் சாலி, கொலன்னாவ பிரதேசத்தில் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டார். அசாத் சாலியிடம் குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரகைளை நடத்தி வருவதாக ஹுலுகல்ல தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten