[ வியாழக்கிழமை, 09 மே 2013, 08:32.14 AM GMT ]
மகாராணி பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளாமைக்கு காரணம் இலங்கையின் மோசமான மனித உரிமை நிலை என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க ஏஎப்பி ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத சட்டத்தின் கைது செய்யபட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் மேயர் அசாத் சாலியை இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் சந்தித்து பேசியுள்ளார்.
"மகாராணி இலங்கைக்கு உறுதியான அரசியல் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். �மனித உரிமை நிலைமையை மேம்படுத்துங்கள்� என்பதே அந்த செய்தியாகும்.
இலங்கையில் இன்னும் பல ஆட்சி பிரச்சினைகள் காணப்படுகிறன. அதற்கும் பதிலளிக்க வேண்டும்" என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மனித உரிமை மேம்படுத்தப்படாவிட்டால் அங்கு நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என கனடா முன்னதாக எச்சரித்தது.
இதனை அடுத்து இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடாத்துவது குறித்து இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் எதிர்ப்புக்கள் கிளம்பின.
எனினும் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்ளப்போவதாக அறிவித்துள்ளன.
இந்த நிலையில் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என பிரித்தானிய மகாராணி அண்மையில் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அசாத் சாலியை, இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவினர் இன்று சந்திப்பு
[ வியாழக்கிழமை, 09 மே 2013, 08:52.32 AM GMT ]
இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் பேராசிரியர் பிரதீபா மஹானாம ஹேவா உள்ளிட்ட அதிகாரிகள் ஆறு பேர் இந்த சந்திப்பில் ஈடுபட்டனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அசாத் சாலி சிசிச்சை பெற்று வரும் நிலையிலேயே மனித உரிமை ஆணைக்குழுவின் அதிகாரிகள் அவரை இன்று வியாழக்கிழமை பார்வையிட்டுள்ளனர்.
தன்னுடைய தந்தை சட்டவிரோதமான முறையில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அசாத் சாலியின் மகள் மனித உரிமை ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு செய்தார்.
இதனையடுத்தே மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் தலைமையிலான குழுவினர் வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டு அசாத் சாலியை பார்வையிட்டுள்ளனர்.
http://www.tamilwin.net/show-RUmryFTdNblrz.html
குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள கொழும்பு மாநகர சபை முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலியை அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பார்வையிட அனுமதிக்க முடியுமா என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று வியாழக்கிழமை பாராளுமன்றில் கேள்வி எழுப்பினார்.
அசாத் சாலியை அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பார்வையிட அனுமதிக்க முடியுமா? - சபையில் ரணில் கேள்வி
[ வியாழக்கிழமை, 09 மே 2013, 11:02.39 AM GMT ]
அசாத் சாலி கைது குறித்து இன்று பாராளுமன்றில் எதிர்கட்சித் தலைவர் விசேட உரை ஒன்றை ஆற்றினார்.
அசாத் சாலியின் குடும்பத்தினர் தன்னை சந்தித்ததாகவும் அசாத் சாலியை பார்வையிட வாய்ப்பு பெற்றுத் தருமாறு தன்னிடம் அவர்கள் கோரியதாகவும் எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அதன்படி அசாத் சாலியை பார்வையிட அவரது குடும்பத்தினருக்கு வாய்ப்பு பெற்றுத் தர முடியுமா என எதிர்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.
அதன்போது பாராளுமன்ற சபாநாயகர் ஆசனத்தில் இருந்த பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி இது குறித்து சபாநாயகருக்கு அறிவித்து பின்னர் பதில் அளிக்கப்படும் என குறிப்பிட்டார்
Geen opmerkingen:
Een reactie posten