தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 9 mei 2013

தாயை அடித்து கொலை செய்த மகன்: மட்டக்களப்பில் சம்பவம் !


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் தாய் ஒருவரை அடித்துக் கொலை செய்ததாகக் கூறப்படும் அவரது மகன் ஒருவர் பொலிஸில் சரணடைந்துள்ளார்.
இச்சம்பவம் காத்தான்குடி 3ஆம் குறிச்சி ஊர்வீதி பாவாலேனிலேயே இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

குறித்த மகன் தனது தாயை வீட்டில் வைத்து தாக்கியும் அடித்தும் காயப்படுத்தியுள்ளார்.
இதனால் படுகாயமடைந்த தாயை அயலவர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது அவர் வழியில் உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏ.றஹ்மததும்மா (வயது 54) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
தாயை இவ்வாறு அடித்து கொலை செய்ததாகக் கூறப்படும் அவரது மகன் புத்தி சுவாதீனமுற்றவர்; எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் தற்போது காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள நிலையில், இது தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 

Geen opmerkingen:

Een reactie posten