தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 26 mei 2013

போர்க்குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை! மன்னிப்புச்சபை அறிக்கையை நிராகரிக்கிறது இராணுவம்


சட்டவிரோதமாக குவைத்தில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க நடவடிக்கை!
[ சனிக்கிழமை, 25 மே 2013, 11:11.42 AM GMT ]
இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பில் குவைத் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குவைத்தில் சட்டவிரோதமான முறையில்  தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கே பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது.
இவர்களுக்கு தண்டனை எதுவுமின்றி நாட்டை விட்டு வெளியேறிச் செல்ல அனுமதியளிப்பது குறித்து குவைத் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், பொது மன்னிப்பு காலம் தொடர்பில் இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், இந்தியா, நேபாளம், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் குவைத்தில் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

போர்க்குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை! மன்னிப்புச்சபை அறிக்கையை நிராகரிக்கிறது இராணுவம்
[ சனிக்கிழமை, 25 மே 2013, 10:13.25 AM GMT ]
போர்க்குற்றவாளிகள் இலங்கையில் சுதந்திரப் பறவைகளாக உலாவுகின்றனர் என்று சர்வதேச மன்னிப்புச்சபை சுமத்தியுள்ள குற்றச்சாட்டை இலங்கை இராணுவம் அடியோடு நிராகரித்துள்ளது. அத்துடன் போர்க்குற்றம் இடம்பெற்றதற்குத் தகுந்த ஆதாரங்கள் இருப்பின் அவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
2012ம் ஆண்டு உலகளாவிய ரீதியில் மனித உரிமைகளின் நிலைப்பாடு குறித்து ஆய்வு நடத்தி 2013ம் ஆண்டுக்கான அறிக்கையை சர்வதேச மன்னிப்புச் சபை நேற்று முன்தினம் வியாழக்கிழமை வெளியிட்டது.
போர் முடிவடைந்துள்ள நிலையிலும் போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகியவை குறித்து விசாரணைக்குட்படுத்தப்படவில்லை. போர்க்குற்றவாளிகள் இலங்கையில் சுதந்திரமாக உலா வருகின்றனர் என்று அந்த அறிக்கையில் சர்வதேச மன்னிப்புச் சபை குற்றஞ்சாட்டியிருந்தது.
இது குறித்து வினவியபோதே இராணுவ ஊடகப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடா்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
இலங்கையில் போர்க்குற்றவாளிகள் சுதந்திரமாக உலா வருகின்றனர் என சர்வதேச மன்னிப்புச் சபை முன்வைத்துள்ள குற்றச்சாட்டை நாம் அடியோடு நிராரிக்கிறோம்.
இராணுவத்தால் திட்டமிட்ட முறையில் போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்படவில்லை. இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் மன்னிப்புச்சபை போர்க்குற்றங்கள் எப்போது, எங்கு, எந்த நேரத்தில் இடம்பெற்றன என்று தம்மிடமிருக்கும் ஆதாரங்களை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கவேண்டும்.
போர்க்குற்றம் என்பது யுத்த காலத்தில் தான்தோன்றித்தனமாகச் செய்யப்படும் குற்றச்செயல்களாகும். ஆனால், போரின்போது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இராணுவத்தினர் அவ்வாறான குற்றச்செயலில் ஈடுபடவில்லை.
தீவிரவாதிகளிடமிருந்து 2 லட்சத்து 95 ஆயிரம் மக்களைப் பாதுகாப்பாக மீட்டெடுத்தோம். இவர்களை நாம் மீட்டெடுத்த போதும் தீவிரவாதிகள் அவர்களைத் தாக்கினர்.
இவ்வாறாக பாதுகாப்பாக மீட்கப்பட்டவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுத்து மீள்குடியேற்றம் செய்துள்ளோம். அதுமட்டுமல்லாது, தற்போதும் இந்த மக்களின் அபிவிருத்திக்கு இராணுவத்தினர் பெரும் பங்காற்றி வருகின்றனர்.
அத்துடன், 11 ஆயிரம் முன்னாள் போராளிகளுக்குப் புனர்வாழ்வளித்து அவர்களை சமூகத்துடன் இணைத்துள்ளோம். அவர்களுக்கு நிம்மதியான வாழ்வை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்.
இப்படியாக சமூகநல நோக்குடன் செயற்பட்ட செயற்படுகின்ற இராணுவமா போர்க்குற்றம் புரிந்தது? போர்க்குற்றம் புரிந்திருந்தால் 11 ஆயிரம் முன்னாள் போராளிகளுக்குப் புனர்வாழ்வளித்து அவர்களை எப்படி இராணுவம் சமூகமயப்படுத்தும்?
எம்மீது பொய்க்குற்றச்சாட்டுகளைச் சுமத்தும் சர்வதேசத்தினர் இவற்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். இதைவிடுத்து, புலம்பெயர் தமிழர்களின் கைப்பாவையாகச் செயற்பட்டு சர்வதேச மன்னிப்புச்சபை எம்மீது போர்க்குற்றம் சுமத்தி சர்வதேச ரீதியில் தமக்குள்ள நற்பெயரை இழக்கின்றது'' என்றார் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய.

Geen opmerkingen:

Een reactie posten