தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 9 mei 2013

கொழும்பு விபத்தில் காயமடைந்த சுவிஸ் தமிழ்ச் சிறுவனும் சிகிச்சை பலனின்றி பலி!


சுவிஸ் பிரஜைகளின் உயிரைப் பறித்தவருக்கு தண்டனை வழங்க வேண்டும்: சண். குகவரதன் கோரிக்கை
[ வியாழக்கிழமை, 09 மே 2013, 02:54.44 AM GMT ]
அண்மையில் வெள்ளவத்தைப் பகுதியில் மஞ்சள் கோட்டினைக் கடக்க முற்பட்ட வேளையில் விபத்துக்குள்ளாகி மூவர் உயிரிழந்த சம்பவம் துக்ககரமானதும், நெஞ்சை நெகிழ வைக்கும் ஒரு விடயமாகும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் உப பொதுச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சண். குகவரதன் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் உறவுகள் சொந்த மண்ணிற்கு தமது உறவுகளைப் பார்க்க வரும் போதோ அல்லது சுற்றுலாவிற்காக வரும் போதோ இயலுமானவரை இலங்கையின் வீதிப் போக்குவரத்து நடைமுறைகளையும் அதன் கட்டமைப்புக்களையும் அறிந்த வைத்திருப்பது ஒரு சிறந்த அனுபவமாகும் எனவும் அவர் வலியிறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் சுவிஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு தமது உறவுகளைத் தேடிவந்த நிலையில் பாதசாரிக் கடவையை கடக்க முற்பட்ட போது மதுபோதையில் கார் செலுத்தி வந்த நிலையில் விபத்துக்குள்ளாகியதில் மூவர் உயிரிழந்தமை வருந்ததத்தக்க விடயமாகும்.
இனி தமிழ் மக்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில் நாளுக்கு நாள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வரும் நிலையில் பெரும் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை எற்பட்டுள்ளது.
இவ்வாறு போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்காது மதுபோதையில் வாகனம் ஓட்டிவந்த குறித்த நபரை சட்டத்தின் முன் நிறுத்தி தகுந்த தண்டனை வழங்க வேண்டியது போக்குவரத்து அதிகாரிகளின் கடமையாகும்.
இந்த நாட்டிற்கு புலம்பெயர் நாடுகளில் இருந்து நிம்மதியாக தமது உறவுகளை சந்திக்க தமது சொந்த மண்ணிற்கு பயணிப்பதற்கு கூட, இவ்வாறான சம்பவங்களால் பெரும் சிரமத்துக்குள்ளாகிறார்கள். இது மிகவும் மனவருத்தத்திற்குரிய விடயமாகும்.
அண்மைக் காலமாக நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களால் தமிழ் மக்கள் மட்டுமல்லாது பல்லின மக்களும் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டு வருகின்றது. இதனால் பாதிக்கப்படுவது அப்பாவிப் பொதுமக்களே.
ஆகவே, இவ்வாறான சம்பவங்கள் இனிவரும் காலங்களில் நிகழாமல் இருக்க போக்குவரத்து விதிகளை கடைப்பிடித்து வாகனங்களை செலுத்த வேண்டியது அனைவரினதும் கடமையாகும் என சண். குகவரதன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு விபத்தில் காயமடைந்த சுவிஸ் தமிழ்ச் சிறுவனும் சிகிச்சை பலனின்றி பலி!
[ வியாழக்கிழமை, 09 மே 2013, 12:55.20 AM GMT ]
விடுமுறையைக் கழிப்பதற்காக சுவிஸ் நாட்டில் இருந்து இலங்கை வந்த தமிழ்ச் சகோதரங்கள் கொழும்பு, வாகன விபத்தில் சிக்கிப் பலியாகிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே சகோதரி மற்றும் உறவினரான ஒரு பெண் ஆகிய இருவர் இவ் விபத்தில் பலியாகினர்.
இன்று அவ் விபத்தில் காயமடைந்த சிறுவனும் சிகிச்சை பலனின்றி மரணமானான்.
கொழும்பு வெள்ளவத்தை பகுதி வீதியில் பாதசாரிக் கடவையில் வீதியைக் கடக்க முற்பட்ட வேளையில், கார் ஒன்று மோதியதில் கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்தில் சுவிஸில் இருந்து இலங்கைக்கு சென்ற ஜவீன் ஜெயந்திமாலா தம்பதிகளின் மகள் ஜனனி (16) உயிரிழந்ததுடன், ஜவீனின் சகோதரியின் மகள் (பாலசூரியன் வாரணி (29) படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை தெரிந்ததே.
மேலும் படுகாயமடைந்த ஜவீனின் மகன் ஜனன் (13) கொழும்பு வைத்தியசாலையில் தீவிர சிகிசைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பலனின்றி மரணமானான்.
பொலிஸ் விசாரணைகளின் போது காரை ஓட்டி வந்த சாரதி மதுபோதையில் இருந்ததனால் இக் கோர விபத்து நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten