[ ஞாயிற்றுக்கிழமை, 05 மே 2013, 02:48.45 AM GMT ]
மாலைதீவுடன் அமெரிக்கா ஏற்படுத்திக் கொண்டுள்ள பாதுகாப்பு உடன்படிக்கையின் படி அமெரிக்காவின் பாதுகாப்பு தளம் ஒன்று மாலைதீவில் அமைக்கப்படும்.
எனது தந்தை பயங்கரவாதியல்ல, இனவாதத்தையும் மதவாதத்தையும் எதிர்த்து ஐக்கியத்துக்காக குரல் கொடுத்தவர். அவரை ஏன் தேவையற்ற விதத்தில் கைது செய்து தடுத்து வைக்க வேண்டும் என அசாத் சாலியின் மகள் அமீனா அசாத் சாலி கண்ணீர் மல்கக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்காவின் விமானங்கள் மற்றும் கப்பல்கள் மாலைதீவு கடல்பகுதிக்குள் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி வந்துசெல்ல முடியும்.
இதன்போது அந்த விமானங்கள் மற்றும் கப்பல் நிச்சயமாக இலங்கையின் கரையோர பிரதேசங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும்.
இலங்கையின் சீனாவின் ஆதிக்கம் கூடியுள்ளதை அடுத்து அதனை கட்டுப்படுத்தும் முகமாகவே அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
அத்துடன் வளர்ச்சிப்பெற்று வரும் இஸ்லாமிய அடிப்படைவாதம், காரணமாக இலங்கைக்கு மேலும் அச்சுறுத்தல்கள் ஏற்படக்கூடும் என்று சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார்.
எனது தந்தை பயங்கரவாதியல்ல!ஐக்கியத்துக்காக குரல் கொடுத்தவர்!- அசாத் சாலியின் மகள் கண்ணீர் மல்க தெரிவிப்பு!
[ ஞாயிற்றுக்கிழமை, 05 மே 2013, 03:29.45 AM GMT ]
குற்றப் புலனாய்வு பிரிவினரால் எனது தந்தை கைது செய்யப்பட்ட நாளிலிருந்து அவர் எவ்வித ஆதாரமும் உட்கொள்ளாமல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ஆகையால் அவரின் உடல்நிலை நிமிடத்துக்கு நிமிடம் மோசமடைந்து வருகிறது.
அத்துடன் நானும் என் தந்தையின் விடுதலைக்காக உண்ணாவிரதம் இருக்கிறேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நேற்று சனிக்கிழமை அசாத் சாலி நிலையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வைத்தியசாலையில் இருக்கும் எனது தந்தையின் உடல் படிப்படியாக மோசமடைந்து வருகிறது. இதற்கு முன்னர் ஒருபோதும் நான் அவரை இப்படிப் பார்த்ததில்லை.
நேற்று நானும் எனது தாயாரும் வைத்தியசாலைக்குச் சென்றபோது அவர் தலையில் வெள்ளைப்பட்டி அணிந்திருந்தார். ஏன் என்று கேட்ட போது தலைவலி என்றார்.
சாப்பிடுமாறு கூறிய போது முடியாது என்றார்.
தண்ணீர் குடிப்பதையும் மருந்து குடிப்பதையும் அவர் மறுத்துள்ளார்.
எனவே தயவு செய்து அவரை விடுவிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
2ம் இணைப்பு
மீண்டும் இரகசிய பொலிஸிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்அசாத் சாலி!
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த அசாத் சாலி விசாரணைகளுக்கென மீண்டும் இரகசிய பொலிஸிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை அசாத் சாலி வைத்தியசாலையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் அசாத் சாலி கடந்த 2ம் திகதி குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டதன் பின் உணவு உட்கொள்ள மறுப்பு தெரிவித்து வந்ததால் அசாத் சாலி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டார்.
இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் இந்திய ஊடகம் ஒன்றிற்கு கருத்து வெளியிட்டதாகக் கூறி அசாத் சாலி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
3ம் இணைப்பு
அஸாத் சாலி கைது!- சிறுபான்மை இனத்திற்கெதிரான அடக்கு முறைகளின் உச்சக்கட்டம்: ஏ. சீ. ஹியாஸ்
ஜனநாகய வழி முறைகளை என்றும் பின்பற்றி வருகின்ற அஸாத் சாலி பயங்கரவாதச் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நடவடிக்கையானது சிறுபான்மை இனத்திற்கெதிரான அரசாங்கத்தின் அடக்கு முறைகளின் உச்சக்கட்டமே எனவும் இந்நடவடிக்கையை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ஏ.சீ.ஹியாஸ் தெரிவித்தார்.
கொழும்பு மாநகர சபை முன்னாள் பிரதி மேயரும், தமிழ் - முஸ்லீம் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான அஸாத் சாலி புலனாய்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்தைக் கண்டித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,
இந்த நாட்டில் மூவின மக்களோடும் இன ஐக்கியத்துடனும் வாழுகின்ற அஸாத் சாலியை புலனாய்வுத் துறையினர் கைது செய்திருக்கும் நடவடிக்கையானது சிறுபான்மை இனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் அடக்கு முறைகளின் உச்சக்கட்டமேயாகும்.
இந்த நாட்டில் வாழுகின்ற முஸ்லீம் சமுகம் சகல இனங்களோடும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றது எந்த மத கலாசார விடயங்களிலும் கை வைத்ததும் கிடையாது. ஆனால் அரசின் பின்னால் நின்று செயற்படுகின்ற பொதுபலசேனா போன்ற இனவாதக் குழுவினர் முஸ்லிம்களை அடக்கி ஆள்வதற்கான நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக முஸ்லிம்களால் காலா காலமாக பின்பற்றப்படுகின்ற “ஹலால்” என்கின்ற விடயத்தில் கைவைத்து இனவாதத்தைத் தூண்டியதுடன் பள்ளிவாசல்களையும் உடைப்பதற்கு காரணகர்த்தாவாக இருந்துள்ளனர்.
முஸ்லிம்கள் பேணி வருகின்ற “ஹலால்” விடயத்தினை கேவலப்படுத்தியும் பள்ளிவாசல்களை உடைத்தும் முஸ்லீம்களின் மனதை நோகடித்து செயற்பட்டு நாட்டில் இனவாதத்தை ஏற்படுத்தி நாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவித்த பொது பலசேனா போன்ற இனவாதக் குழுவினரை பயங்கரவாதச் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
ஆனால் மத கலாசார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் சமூகம் மனம் நொந்து வேதனைப்பட்ட வேளையில் அரசாங்கத்தில் தமது அமைச்சுப் பதவிகளுக்காகவும் ஏனைய சலுகைகளுக்காகவும் சூழ்நிலைக் கைதியாக இருக்கும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் பேசாத நிலையில் முஸ்லிம் என்ற அடிப்படையில் முஸ்லிம் சமூகத்திற்காக குரல் கொடுத்த அஸாத் சாலியை கைது செய்திருப்பது எந்த வகையிலும் நியாயமில்லை.
இந்த நாட்டின் சிறுபான்மைச் சமூகத்தை அடக்கி ஆள விரும்புகின்ற அரசு இது என்பதை இஸாத் சாலியின் கைது மூலம் அதன் உச்சக் கட்டத்தை வெளிக்காட்டியுள்ளது. இது அரசாங்காத்தின் அராஜக நடவடிக்கையாகும்.
முஸ்லிம் சமூகம் பாதிக்கப்படும் போது முஸ்லிம் சமூகத்திற்கு நியாயம் வேண்டி முஸ்லிம் ஒருவர் பேசாமல் யார் பேசுவார்? இதனை பயங்கரவாத நடவடிக்கை என்ற சொல்வது? அப்படியென்றால் பொது பலசேனா அமைப்பினர் மேற்கொள்ளும் இனவாத நடவடிக்கையை என்னவென்று சொல்வது.
அஸாத் சாலி ஒரு ஜனநாயகவாதி இவரை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதை எண்ணி முஸ்லிம் சமூகம் கவலையடைகின்றது. ஆதலால் அவரை விடுதலை செய்யுமாறு நான் கேட்டுக் கொள்கிறேன். என அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten