தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 5 mei 2013

சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம் உத்தியோகபூர்வமாக விண்ணப்பித்தால் இலங்கை செல்ல அனுமதி


சந்திரிகா, சிராணி இணைந்து புதிய அரசியல் கட்சி உருவாக்க திட்டம்! விமுகதி தேசிய அமைப்பாளர்!
[ ஞாயிற்றுக்கிழமை, 05 மே 2013, 04:00.33 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும், முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவும் இணைந்து புதியதோர் அரசியல் கட்சியை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர் எனத் தெரிய வருகிறது.
புதிய கட்சி ஒன்றினை உருவாக்கும் தங்களது திட்டம் தொடர்பில் இலங்கையிலுள்ள மேற்கத்தைய நாடுகளின் தூதுவர்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சோ்ந்த முன்னாள் பிரபலங்கள் மற்றும் தற்போதைய அரசில் அங்கம் வகிக்கும் பலரும் இந்தப் புதிய அரசியல் கட்சியில் இணைந்து செயற்படவுள்ளனர்.
முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான வழக்குகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதும் இந்தப் புதிய அரசியல் கட்சி ஸ்தாபிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
இந்தப் புதிய அரசியல் கட்சியின் தேசிய அமைப்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் மகன் விமுக்தி குமாரதுங்க நியமிக்கப்படவுள்ளார் என்றும் மேலும் தெரிய வருகிறது.

சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம் உத்தியோகபூர்வமாக விண்ணப்பித்தால் இலங்கை செல்ல அனுமதி
[ ஞாயிற்றுக்கிழமை, 05 மே 2013, 03:32.11 AM GMT ]
சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தினர் உத்தியோகபூர்வமாக விண்ணப்பித்தால் இலங்கைக்கு சென்று வர விசா வழங்கப்படும் என்று இலங்கையின் பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.
உயர்ஸ்தானிகர் கிரிஸ் நோனிஸ், வெளிநாட்டு செய்தி சேவை ஒன்றுக்கு இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
கடந்த வருடம் சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தினர் உரிய காரணங்களை குறிப்பிடாமை காரணமாகவே அவர்களின் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றவியல் பிரேரணை நடவடிக்கைகளை கவனிக்கும் பொருட்டு இலங்கைக்கு வரவிருந்த சர்வதேச சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களுக்கே இலங்கை அரசாங்கம் விசா வழங்கலை மறுத்தமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten