தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 24 mei 2013

அமைச்சர் பீரிஸுக்கும் பொதுநலவாய நாடுகள் வர்த்தகப் பேரவையின் தலைவருக்கும் இடையில் சந்திப்பு


டொமினிக்கன் குடியரசில், ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய இலங்கையர்கள் கைது
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 03:32.14 AM GMT ]
டொமினிக் குடியரசை தளமாக கொண்டு, இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களை வெவ்வேறு நாடுகளுக்கு ஆட்கடத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்திய வலையமைப்பு ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.
டொமினிக் குடியரசின் தேசிய காவற்துறையினர் இந்த குழுவை கைது செய்துள்ளனர்.
கனடாவில் வசிக்கும் இலங்கையர் ஒருவரின் தலைமையில் இந்த குழு செயற்பட்டு வந்ததாகவும், கடந்த இரண்டு மாதங்களாக இந்தக் குழு டொமினிக் குடியரசில் பதுங்கி இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து அவர்கள் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டதாக காவற்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பீரிஸுக்கும் பொதுநலவாய நாடுகள் வர்த்தகப் பேரவையின் தலைவருக்கும் இடையில் சந்திப்பு
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 03:34.22 AM GMT ]
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், பொதுநலவாய நாடுகளின் வர்த்தக பேரவையின் தலைவர் பீற்றர் கலகானை நேற்றைய தினம் சந்தித்துள்ளார்.
இதன் போது இலங்கையில் நடத்தப்படவுள்ள பொது நலவாய நாடுகளின் தலைவர்களது மாநாட்டுக்கான தயார்படுத்தல்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த மாநாட்டு செலவினங்களுக்கான நிதி வழங்கள் குறித்தும் பேசப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இந்த மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு தற்போது சில நாடுகள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன. இது குறித்தும் நேற்றைய தினம் பேசப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Geen opmerkingen:

Een reactie posten