தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 24 mei 2013

நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட எந்தவொரு சவாலையும் எதிர்நோக்கத் தயார்!– ஐ.தே.க


தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் ஐ.நாவுடன் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ள முடியாது!– அரசாங்கம்
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 01:48.25 AM GMT ]
தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ள முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
வடக்கு காணி சுவீகரிப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
குறிப்பாக பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றை அமைப்பதற்காக 3000 ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட உள்ளது.
இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது.
எனினும், இது தொடர்பில் பதிலளிக்கப் போவதில்லை என பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் தேசியப் பாதுகாப்பு விவகாரத்தில் எந்தத் தரப்புடனும் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளப் போவதில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினர் தமிழ் மக்களிடமிருந்து காணிகளை அபகரிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய நாடுகள் அமைப்பில் முறைப்பாடு செய்துள்ளது.

நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட எந்தவொரு சவாலையும் எதிர்நோக்கத் தயார்!– ஐ.தே.க
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 01:52.57 AM GMT ]
 நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட எந்தவொரு சவாலையும் எதிர்நோக்கத் தயார் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

 அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள் போன்ற அடக்குமுறைகளுக்கு அஞ்சி நாட்டின் ஜனநாயகத்தை நிலைநாட்டும் முயற்சிகள் கைவிப்பட மாட்டாது.
 தேர்தல் தொடர்பில் ஜெர்மன் அரச சார்பற்ற நிறுவனமொன்று நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்ட கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக சேறு பூசும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
 அரச ஊடகங்களும் சில தனியார் ஊடகங்களும் இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக தேசத்துரோக முத்திரை குத்த முயற்சிக்கின்றன.
 அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு ஜெர்மனியிடம் பணம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது,
 வெளிநாட்டவர்கள் இலங்கையில் கருத்தரங்கு ஒன்றை நடாத்துவதனால் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten