[ வியாழக்கிழமை, 09 மே 2013, 04:49.55 AM GMT ]
போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தினருக்கு எதிராக அமைச்சர் யாழ் பொலிஸ் நிலையத்தில் தனது முறைப்பாடை பதிவு செய்துள்ளார்.
யாழ்.சுன்னாகம் பகுதியில் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் ஒன்றின் மீது பாடசாலை மாணவர்கள் கல்வீச்சுத் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
இவ் அமைப்பினர் அமைச்சருக்கும் அமைச்சரின் கீழ் இயங்கும் மகேஸ்வரி நிதியத்திற்கும் எதிராக கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சிலும் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து வந்துள்ளனர்.
இதன்போது இவர்கள் மீது யாழ்.கச்சேரிக்கு முன்னால் தாக்குதல் நடத்தப்பட்டு ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையிலேயே அமைச்சர் இவர்கள் மீது முறைப்பாடு செய்துள்ளார்.
இவ்வமைப்பினர் மீது எவராது தாக்குதல் நடாத்தினால் அதற்கு தாங்கள் பொறுப்பாளிகள் அல்லவென்றும் அமைச்சர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
சுன்னாகத்தில் அரசாங்க பஸ் மீது பாடசாலை மாணவர்கள் கல்வீசித் தாக்குதல்
[ வியாழக்கிழமை, 09 மே 2013, 04:54.17 AM GMT ]
இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தெல்லிப்பளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த இ.பே.ச பஸ் ஒன்றே மாணவர்களது தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.
தெல்லிப்பளையிலிருந்து மாணவர்களை ஏற்றி வந்த இந்த பஸ் சுன்னாகத்தில் நின்ற பாடசாலை மாணவர்களை ஏற்ற மறுத்தமையே இத்தாக்குதலுக்கான காரணமென்று தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடென்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Geen opmerkingen:
Een reactie posten