தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 23 mei 2013

வெளிநாடுகளுக்கு ஆட்களை கடத்தும் இலங்கையர் 18 பேர் கைது

அவுஸ்திரேலியாவிலிருந்து 31 இலங்கையா்கள் இன்று நாடு திரும்புகின்றனா்!
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 10:12.21 AM GMT ]
இலங்கையிலிருந்து புகலிடம் கோரி சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற மேலும் 31 இலங்கையர்கள் இன்று வியாழக்கிழமை  திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
31 இலங்கையர்கள் இவ்வாறு நாடு திரும்புவதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிரன்டன் ஓ கொன்னர் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்மஸ் தீவில் இருந்து இவர்கள் கொழும்புக்கு விசேட விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தொடக்கம் இதுவரை 1161 இலங்கை அகதிகள் நாடு கடத்தப்பட்டதாகவும், அவர்களில் 950 பேர் சுய விருப்பின் பேரில் அனுப்பப்பட்டதாகவும் பிரன்டன் ஒ கொன்னர் மேலும் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளுக்கு ஆட்களை கடத்தும் இலங்கையர் 18 பேர் கைது
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 10:27.46 AM GMT ]
இலங்கையர்களை சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்கு அனுப்பி வைக்கும் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்டவர்களில் 11 பேர் இங்கிலாந்தையும் 7 பேர் பிரான்ஸையும் சேர்ந்தவர்களாவர்.
இவர்களிடம் இருந்து கணினி மற்றும் ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten