முள்ளிவாய்க்கால் பெருவலியினை நினைவேந்த தயாராகும் உலகத் தமிழினம்! உச்சநிகழ்வாக தமிழீழ சுதந்திர சாசனம் முரசறைவு!
[ புதன்கிழமை, 08 மே 2013, 05:11.49 PM GMT ]
வணக்க நிகழ்வுகள் , கவனயீர்ப்பு நிகழ்வுகள், பரப்புரைகள், கண்காட்சிகள், கருத்தரங்குகள், ஒன்றுகூடல்கள் என பல்வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளின் உச்ச நிகழ்வாக தமிழீழ சுதந்திர சாசனம் உலகத் தமிழர்களால் முரசறையப்படவிருக்கின்றது.
ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழுகின்ற தேசங்களில் மட்டுமல்ல தமிழகம் மலேசியா தென்னாபிரிக்கா என பல்வேறு இடங்களிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தப்படுகின்றது.
தமிழர் அமைப்புக்கள் பலவும் மே-18 முள்ளிவாய்க்கால் நாளினை பல்வேறு பெயர்களில் நினைவேந்தி வரும் நிலையில் , இவையாவற்றினையும் உள்ளடக்கிய பெருங்குறியீடாக இந்நாளினை, நாடுகளைக் கடந்து வாழும் தமிழர்களை அனைத்துலக அரங்கில் பிரதிநிதித்துவப்படும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது, தமிழீழத் தேசிய துக்க நாளாக பிரகடனப்படுத்தியுள்ளது.
வரலாற்று முக்கியத்துவம் பெறும் மே-18ம் நாட்கள்
2009ம் ஆண்டு மே-18ம் நாளுடன் தமிழீழத் தாயகத்தில் நிறுவப்பட்டிருந்த நடைமுறைத் தமிழீழ அரசினை வென்றுவிட்டதன் ஊடாக, தமிழீழம் என்ற ஈழத்தமிழர்களின் அரசியல் பெருவிருப்பினை முள்ளிவாய்க்கால் மண்ணில் புதைத்துவிட்டதாக சிங்களம் வெற்றிக்களிப்பில் இருந்தவேளை, மே-18ல் நாளிலேயே 2010ம் ஆண்டு தோற்றம் பெற்றிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது சிங்களத்திற்கு சவலாக மாறியது.
அதே மே18ம் (2013) நாளில் தமிழீழ சுதந்திர சாசனத்தினை முரசறைந்து, தமிழீழம் நோக்கிய தங்களது விடுதலைப்பாதையினை அனைத்துலகின் முன் தெளிவாக முன்வைக்க உறுதிபூண்டுள்ளனர்.
அசாத் சாலியை கைது செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஹர்த்தால் அனுஸ்டிக்குமாறு துண்டுப்பிரசுரம்
[ புதன்கிழமை, 08 மே 2013, 04:44.25 PM GMT ]
அகில இலங்கை முஸ்லிம் இளைஞர் அமைப்பு எனும் பெயரில் வெளியிடப்பட்டுள்ள நாளை இத் துண்டுப் பிரசுரத்தில் வியாபார நிலையங்கள், பாடசாலைகள், காரியாலயங்கள் மற்றும் வங்கிகளை மூடி ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
இதேவேளை ஹர்த்தால் அனுஸ்டிக்கவோ இயல்பு நிலைமைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படவோ வேண்டாம் என இராணுவத்தினர் கிழக்கு மாகாண முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட பள்ளிவாசல்கள் மற்றும் சம்மேளனங்களின் பிரதிநிதிகளுக்கும் இராணுவத்தினருக்குமிடையிலான விசேட சந்திப்பு ஒன்று நேற்றுக் காலை சித்தாண்டி இராணுவ முகாமில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஹர்த்தால் அனுஷ்டிக்க வேண்டாம் என மக்களிடம் வேண்டுகோள்விடுக்குமாறு படையினர் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் சம்மேளன பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அஸாத் சாலி மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. அவர் சட்டத்தின் பார்வையில் குற்றவாளியாக கருதப்பட்டே கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறான நிலையில் இதற்கு எதிராக ஹர்த்தால் அனுஷ்டிப்பது தேவையற்ற பிரச்சினைகளுக்கே வழிவகுக்கும்.
எனவே இதுவிடயத்தில் மக்களை அறிவூட்டுவதும் ஹர்த்தாலுக்கு துணைபோக வேண்டாம் எனக் கோருவதும் பள்ளிவாசல் சம்மேளனங்களினது கடப்பாடாகும் எனவும் இராணுவத்தினர் இச் சந்திப்பின்போது வேண்டுகோள்விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:
Een reactie posten