[ செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 05:48.17 AM GMT ]
உதிரவேங்கை ஆலய நிர்வாகத்தால் நேற்று கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த பின்னரே நீதிபதி இந்த இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
குறித்த ஆலயத்தை ஆக்கிரமித்துள்ள சிங்கள வர்த்தகர் ஒருவர் தான் இங்கே வர்த்தக நிலையம் அமைக்கப் போவதாக தெரிவித்து ஆலய வளாகத்திற்குள் கட்டடம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
ஏ-9 நெடுஞ்சாலையில் இந்த ஆலயம் அமைந்துள்ளதால் தமக்கு வியாபாரம் நன்றாக நடைபெறும் என்பதை சாதகமாகப் பயன்படுத்தியே இந்த சிங்களவர் இங்கே வர்த்த நிலையம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.
சிங்களப் படையினர் மற்றும் சிங்களக் காவல்துறை ஆகியோரின் ஒத்துழைப்புடனேயே இவர் இந்த ஆக்கிரமிப்பை மேற்கொண்டு வருகின்றார்.
கடந்த வியாழக்கிழமை மேற்படி ஆலயம் உடைக்கப்பட்டு இங்கிருந்த பெறுமதியான விக்கிரகங்களும் திருடப்பட்டிருந்தன.
இது குறித்து கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் எதுவுமே செய்ய முடியாத ஆலய நிர்வாகம் நேற்று கிளிநொச்சி நீதிமன்றில் முறைப்பாடு வழக்குத் தாக்கல் செய்தது.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி எதிர்வரும் 20ம் திகதி குறித்த சிங்களவரை மன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.
இந்தக் காணியை தனக்குச் சொந்தமானது என்று நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் ஏதும் இருந்தால் அதையும் எடுத்து வருமாறும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
அதுவரை இந்த ஆலய வளாகத்தில் எந்தவொரு கட்டுமானப் பணிகளையும் முன்னெடுக்க வேண்டாம் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான உத்தரவை காவல்துறையினரின் உதவியுடன் குறித்த காணியில் ஒட்டுமாறும் நீதிபதி தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து குறித்த படிவம் காணியில் ஒட்டப்பட்டுள்ளது.
இலங்கை சிறையில் வாடும் இராமேஸ்வரம் மீனவர்கள் காவலை நீட்டிப்பதா?: கருணாநிதி கண்டனம்
[ செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 04:04.44 AM GMT ]
28.4.2013 அன்று நான் விடுத்த அறிக்கையில் தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து பல ஆண்டுக் காலமாக நடத்தி வரும் தாக்குதல் குறித்தும், அதைப் பற்றி நமது மத்திய மாநில அரசுகளோ, இலங்கை அரசோ காதிலே போட்டுக் கொள்ளாத நிலையும் இருப்பது குறித்தும் விவரமாகக் கூறியிருந்தேன்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
28.4.2013 அன்று நான் விடுத்த அறிக்கையில் தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து பல ஆண்டுக் காலமாக நடத்தி வரும் தாக்குதல் குறித்தும், அதைப் பற்றி நமது மத்திய மாநில அரசுகளோ, இலங்கை அரசோ காதிலே போட்டுக் கொள்ளாத நிலையும் இருப்பது குறித்தும் விவரமாகக் கூறியிருந்தேன்.
தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சியினரும் மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லி, இந்தப் பிரச்சினை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டபோதிலும், தமிழக மீனவர்களுக்கு விடிவு ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
இலங்கை அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேர், எப்படியும் இந்த முறை விடுவிக்கப்பட்டு விடுவோம் என்ற நம்பிக்கையோடு இருந்த நேரத்தில், மூன்றாவது முறையாக மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் 6.5.2013 வரை இவர்களுக்கு காவல் நீடிப்பு செய்யப்பட்டிருந்தது.
6-ந் தேதி விடுவிக்கப்படுவோம் என்று அந்த மீனவர்களும், இங்கேயுள்ள இராமேஸ்வரம் மீனவர்களும் எதிர்பார்த்திருந்த நிலையில் நேற்றையதினம் அவர்களுக்கு மீண்டும் மே 20-ம் தேதி வரை காவல் நீடிப்பு செய்யப்பட்டுள்ளது, கொடுமையிலும் கொடுமையான செய்தியாகும்.
காவல் நீடிப்புக்கு நீதிபதி சொல்லியிருக்கின்ற காரணம், மீனவர்கள் கைது தொடர்பாக போதுமான ஆவணங்களை இலங்கைக் கடற்படையினர் தாக்கல் செய்யவில்லை என்று கூறியிருக்கிறார்கள்.
இலங்கைக் கடற்படையினர் ஆவணங்களைத் தாக்கல் செய்யாதது யாருடைய குற்றம்? எப்படியோ நான்காவது முறையாக இராமேஸ்வரம் மீனவர்களுக்கு காவல் நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி மத்திய, மாநில அரசுகள்தான் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை அரசின் கவனத்திற்கு இந்தப் பிரச்சினையை மத்திய அரசு இனியாவது கொண்டு சென்று, ராமேஸ்வரம் மீனவர்களின் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென்று மீண்டும் மீண்டும் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இராமேஸ்வரம் மீனவர்கள் மாத்திரமல்ல; ஏப்ரல் 5-ந் தேதி கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, புதுவைகாரைக்காலைச் சேர்ந்த 26 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்து, ஊர்க்காவல் துறை நீதிமன்றத்திலே ஆஜர்படுத்தி, அவர்களையும் சிறையிலே அடைத்திருக்கிறார்கள்.
நீதிமன்றம் அவர்களை மே 29-ந் தேதி வரை சிறையிலே அடைக்க உத்தரவிட்டு அவர்களும் சிறையிலே இலங்கையிலே இருந்து வருகிறார்கள். அவர்களின் பிரச்சினைக்கும் தீர்வு காணப்பட வேண்டும்.
சிறையிலே அடைபட்டுள்ள இந்த இந்திய மீனவர்களின் பிரச்சினை ஒருபுறமிருக்க, மீன் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள இந்த கால கட்டத்தில், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையே சுரண்டக்கூடிய வகையில் செல்வாக்கு படைத்த ஒரு சிலர் மட்டும் தொழில் ரீதியான மீன்பிடிக் கப்பல்களைப் பயன்படுத்திக் கொண்டு இந்திய எல்லைக்குள் மீன் பிடிப்பதற்கு அனுமதி பெற்றுள்ளதை தென்னிந்திய மீனவர்கள் சங்கம் கண்டித்திருக்கிறது.
மீன் உற்பத்தியை மனதிலே கொண்டு, தமிழக மீனவர்கள் எல்லாம் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் மே 29ம் தேதி வரை மீன் பிடிக்கச் செல்லக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ள காலத்தில் ஒரு சிலருக்கு மட்டும் மீன்பிடிக்க அனுமதி அளித்திருப்பது என்பது சாதாரண, சாமான்ய மீனவர்களைப் பெரிதும் பாதிக்கக்கூடிய செயல் அல்லவா?
எனவே இந்தப் பிரச்சினையிலே மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, தற்போது செல்வாக்குள்ள ஒரு சிலர் மட்டும் மீன் பிடிக்க அனுமதி அளித்திருப்பதைத் திரும்பப் பெறவேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten