தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 7 mei 2013

அஸாத் சாலி கைது செய்யப்பட்டமைக்கு ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம்


முல்லைத்தீவில் சூட்டுக் காயங்களுடன் இராணுவச் சிப்பாயின் சடலம் மீட்பு
[ செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 02:52.03 AM GMT ]
முல்லைத்தீவு மாஞ்சோலைப் பகுதியில் இருந்து துப்பாக்கி சூட்டுக் காயங்களுடன் படைசிப்பாய் ஒருவரது சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது.
அப்பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அண்மையில் உள்ள இராணுவ முகாமில் பணியாற்றி வந்த சிப்பாயே சடலமாக மீட்கப்பட்டவராவார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவரது தாயைப் பகுதியின் ஊடாக குண்டு பாய்ந்து தலைப் பகுதியூடாக குண்டு வெளியே பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவரது மரணத்திற்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை என்பதோடு இவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அஸாத் சாலி கைது செய்யப்பட்டமைக்கு ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம்
[ செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 05:59.33 AM GMT ]
கொழும்பு மாநகரசபையின் முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலி கைதுசெய்யப்பட்டமையை வன்மையாகக் கண்டிப்பதாக ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பயங்கரவாதத் தடுப்புச்சட்டத்தை அரசியல் நடவடிக்கை ஒன்றுக்காகப் பயன்படுத்துதல் இலங்கையில் இடம்பெறும் பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தனிமனித சுதந்திரத்திற்கும் சட்டவாட்சிக்கும் முரணான ஒரு விடயம் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்படும் ஒருவருக்கு அரசியயமைப்புக்கு அமைய அதற்கான காரணம் தெளிவாகத் தெரிவிக்கப்பட வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அஸாத் சாலி கைது செய்யப்பட்டமை தொடர்பில் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளதாகவும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten