தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 7 mei 2013

இலங்கைத் தமிழர் வரலாற்றில் தமிழ் பேசும் மக்கள் என்ற கோட்பாட்டை உருவாக்கிய சிறப்பு தந்தை செல்வாவிற்கே உரியது


யாழில் வீதியோரமாய் ஆணொருவரின் சடலம் மீட்பு
[ செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 08:42.51 AM GMT ]
யாழ். திருநெல்வேலி சந்தைக்கு அருகாமையில் இன்று காலை ஆண் ஒருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் பிறவுன் வீதி, கொக்குவிலைச் சேர்ந்த நகை வியாபாரியான ஜெ. ரஞ்சனதாஸ் (வயது 56) என அடையாளம் காணப்படுள்ளார்.
குறித்த நபர் வியாபார விடயமாக கொழும்பு சென்று இன்று அதிகாலை மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பியுள்ளார்.
திருநெல்வேலி பஸ்ஸில் இருந்து இறங்கி வீடு நோக்கி செல்ல முற்பட்டவேளை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்ட பொலிஸார், பிரதே பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கைத் தமிழர் வரலாற்றில் தமிழ் பேசும் மக்கள் என்ற கோட்பாட்டை உருவாக்கிய சிறப்பு தந்தை செல்வாவிற்கே உரியது
[ செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 08:13.51 AM GMT ]
இலங்கைத் தமிழரின் வரலாற்றிலே தமிழ் பேசும் மக்கள் என்ற கோட்பாட்டை உருவாக்கிய சிறப்பு தந்தை செல்வாவிற்கே உரித்தானது என்பதை இந்த இடத்தில் ஞாபகப்படுத்த வேண்டியவனாக இருக்கின்றேன் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் குறிப்பிட்டார்.
தந்தை செல்வாவின் 36வது சிரார்த்த தின நிகழ்வில் உரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் குறிப்பிட்டார்.
மேற்படி நிகழ்வு வந்தாறுமூலை ஸ்ரீ நிர்முகப் பிள்ளையார் ஆலய முன்றலில் மாகாணசபை உறுப்பினர் கி.துரைராசசிங்கம் தலைமையில் நடைபெற்றது. அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
தந்தை செல்வா சாதி, மதம் என்ற குறுகிய வட்டத்தை உடைத்து தமிழ் பேசும் மக்கள் என்ற ஒரே கொள்கையில் வாழ்ந்தவர் என்பது வரலாற்று உண்மையாகும்.
தந்தை செல்வாவின் அரசியல் அனுபவங்களையும் ஆதாரங்களையும் கொள்கைகளையும் வைத்தே இன்று நாம் அரசியல் செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
இது யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மை அன்றே தந்தை செல்வா அவர்கள் தீர்க்க தரிசனமாக எதிர்காலத்தில் தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வு விடயத்தில் உறுதியாகவே இருந்தார் என்பது வரலாற்று உண்மை இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் ஆரம்பக் கூட்டம் 1949ம் ஆண்டு மருதானையில் கூடியது அதன் போது தமிழ் காங்கிரஸ் இரண்டு பிரிவாக இருந்ததை மாற்றி ஒரு புதிய கட்சியாக இலங்கை தமிழரசு கட்சியை ஆரம்பித்து வைத்தவர்.
தமிழ்த் பேசும் மக்களின் பரிதாப நிலையினையும் அவர்களின் எதிர்காலத்தையும் நினைத்து அதிலிருந்து மீள ஒரு சுயாட்சி அதிகாரம் கொண்ட தமிழரசை நிறுவ வேண்டிய தேவையையும் விளக்கி இதுதான் ஒரே ஒரு வழி வேறு எந்த விதமான பரிகாரமும் இல்லை என்பதையும் நன்கு விளக்கமாகவே கூறியிருந்தவர்.
நாம் வெற்றி பெறுவதற்கு அருகதை உள்ளவர்களாக வேண்டுமானால் எமது சமுகத்தில் இருக்கும் குறைகளை களைந்து அதை தூய்மை பெறச்செய்ய வேண்டும் என்பதையும் மிக அழகாகவே விளக்கி இருந்தவர்.
ஒரு கிறிஸ்தவராக பிறந்து வளர்ந்த இவரை இவரின் கொள்கையையும் உறுதியையும் ஏற்றுக்கொண்ட தமிழ் பேசும் மக்கள் சார்பாக வரலாற்று சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலின் பிரதம குருவான துரைசாமிக்குருக்கள் தந்தை செல்வாவிற்கு ஆசிர்வாதம் வழங்கி தலைமையை ஏற்குமாறு வேண்டிக்கொண்டதை மறந்து விட முடியாது
இன்று தந்தை செல்வாவின் கொள்கைகளை உலகமே ஏற்றுக் கொண்டு எமக்கு இனப் பிரச்சனைக்கான தீர்வு கிடைக்கவேண்டுமென ஒரு மித்த குரலாக ஓங்கி ஒளித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், நாமும் நமக்குள் கட்சி பேதங்களை மறந்து வெண்ணை திரண்டு வரும் போது தாலி உடைந்த கதையாக மாறிவிடாது.
தமிழ்த் தேசியத்தின் உறுதியான தந்தை செல்வாவின் கொள்கையினை வென்றெடுக்க அவரது 36 வது நினைவு தினத்தில் அவரால் ஆரம்பித்து வைத்த கட்சியோடு இணைந்து எமது உரிமைகளை வென்றெடுக்க உறுதி பூணுவோம் என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten