தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 25 mei 2013

த.தே.கூட்டமைப்பின் நிர்வாகத்தின் கீழுள்ள திருமலை நகரசபையுடன் அமெரிக்கா உடன்பாடு!– அரசாங்கம் விசனம்

அரசாங்கம் எங்களை அலட்சியப் போக்குடன் நடத்துகின்றது: ரவுப் ஹக்கீம்
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 12:14.11 PM GMT ]
கிழக்கு மாகாணத்தில் இன்று ஐந்து உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியை முஸ்லிம் காங்கிரஸ் கையில் வைத்துக்கொண்டிருக்கின்றது. ஆனால் அரசாங்கம் எங்களை அலட்சியப் போக்குடன் நடத்துகின்றது என அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்தார். 
நேற்று சாய்ந்தமருதில் இடம்பெற்ற நூலகத்திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
உண்மையான நண்பர்கள் யார் என்பதை இந்த அரசாங்கம் பிரித்தறிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் நாங்கள் தொடர்ந்தும் எங்களுக்கு அநியாயம் இடம்பெறும் போது பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
முஸ்லிம் காங்கிரஸை அரசாங்கத்திற்குள்ளே எதிரியாக வைத்துக்கொண்டு தங்களுடைய அரசியல் முன்னெடுப்புக்களை மேற்கொள்ள அரசிற்குள்ளே உள்ளவர்களும், வெளியே உள்ளவர்களும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.
இது தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸின் உண்மையான போராளிகள் அவதானமாக இருக்க வேண்டும்.
அதேபோன்று முஸ்லிம் காங்கிரஸை அரசாங்கத்தில் இருந்து வெளியேற்றி ஆட்சியை கவிழ்க்கவும் சிலர் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.
இந்த அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் ஜனாதிபதியிடம்  தெரிவித்துள்ளேன் எனக் கூறினார்.

த.தே.கூட்டமைப்பின் நிர்வாகத்தின் கீழுள்ள திருமலை நகரசபையுடன் அமெரிக்கா உடன்பாடு!– அரசாங்கம் விசனம்
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 12:48.40 PM GMT ]
இலங்கை அரசாங்கத்தின் அனுமதியைப் பெறாமல், திருகோணமலையில் அமெரிக்கன் நிலையத்தை அமைப்பதற்கு திருகோணமலை நகரசபையுடன் அமெரிக்கத் தூதரகம் புரிந்துணர்வு உடன்பாடு செய்து கொண்ட விவகாரம், அரசாங்கத்திற்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருகோணமலை நகரசபையுடன் இணைந்து பொது தகவல் மற்றும் செயற்பாட்டு நிலையத்தை அமைப்பதற்கு கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் புரிந்துணர்வு உடன்பாட்டை செய்து கொண்டுள்ளது.
இந்த உடன்பாட்டில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக கலாசார, கல்வி, ஊடக விவகாரங்களுக்கான பணிப்பாளர் கிறிஸ்ரொபர் டீலும், திருகோணமலை நகரசபை முதல்வர் கே. செல்வராசாவும் கையெழுத்திட்டனர்.
கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக பொதுசன விவகார பிரிவுக்கும் திருகோணமலை நகரசபைக்கும் இடையிலான இந்த உடன்பாடு நேற்றுமுன்தினம் திருகோணமலை பொது நூலகத்தில் வைத்து கையெழுத்திடப்பட்டுள்ளது.
இது குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு அறிவிக்கப்படவோ அல்லது, அதன் அனுமதி பெறப்படவோ இல்லை. அனைத்துலக நடைமுறைகளுக்கு அமைய, கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் உள்ளூர் அதிகாரிகளுடன் ஏதாவது இணக்கப்பாட்டை ஏற்படுத்த முன்னர், அது குறித்து வெளிவிவகார அமைச்சுக்குத் தெரியப்படுத்தவோ அல்லது அதன் அனுமதியைப் பெறவோ வேண்டும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
எனினும் எந்த அனுமதியும் பெறப்படாமல் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் திருகோணமலை நகரசபையுடன் செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு உடன்பாடு அரசுக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருகோணமலை நகரசபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிர்வாகத்தின் கீழ் இருந்து வருகின்றது. அமெரிக்கன் கோணர் எனப்படும் பொது தகவல் மற்றும் செயற்பாட்டு நிலையங்களை அமெரிக்கா ஏற்கனவே யாழ்ப்பாணத்தலும் கண்டியிலும் நிறுவியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten