தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 25 mei 2013

யுத்தம் முடிந்தும் மீள்குடியேற்றப்படாத நிலை! அதிகாரிகள் பராமுகம் என்கின்றனர் செட்டிகுள மக்கள்

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான ஆட்சி டெல்லியில் அமையும்! முள்ளிவாய்க்கால் நிகழ்வில் தா.பாண்டியன்
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 12:05.07 PM GMT ]
வரும் தேர்தலில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான ஆட்சி டெல்லியில் அமையும் என இந்திய கமியூனிஸ்ட் கட்சி மாநில செயலர் தா. பாண்டியன்  நம்பிக்கை வெளியிட்டார்.
 முள்ளிவாய்க்காலில் மக்கள் பட்ட அவலத்தை மீண்டும் ஒரு முறை நினைவு கூர்ந்த தா பாண்டியன் ஐயா அவர்கள், தமிழகத்தை பொறுத்தவரையில் முன்னெப்போதும் இல்லாத அளவு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதை சுட்டிக் காட்டினார்கள்,
அடுத்து ஆண்டு வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான ஆட்சி டெல்லியில் அமையும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.
அவா் ஆற்றிய உரை காணொளி!

யுத்தம் முடிந்தும் மீள்குடியேற்றப்படாத நிலை! அதிகாரிகள் பராமுகம் என்கின்றனர் செட்டிகுள மக்கள்
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 11:35.15 AM GMT ]
யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஒட்ராக்குள மக்கள் இன்னமும் மீள்குடியேற்றப்படாமையால் தாம் தொடர்ந்தும் அவலங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.
2009ம் ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்திற்கு பின்னர் நாட்டில் சமாதானம் என அரசாங்கத்தினால் கூறப்பட்டு வரும் நிலையில், யுத்தம் முடிவடைந்து 4 ஆண்டுகளைக் கடந்து வெற்றி விழாவினை பெரும் எடுப்பாக நாடெங்கிலும் மேற்கொள்கின்ற நிலையிலும் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் இன்னமும் மீள்குடியேற்றப்படாது பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் 1915ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஒரு பழமையான தமிழ் கிராமம் இது. 1983 ல் ஏற்பட்ட இனக் கலவரத்தினால் இடம்பெயர்ந்த நாம் இரண்டு வருடங்களின் பின் மீள்குடியேறிய நிலையில் 1990ம் ஆண்டு மீள இடம்பெயர வேண்டி ஏற்பட்டது.
இவ்வாறு இடம்பெயர்ந்த 54 குடும்பங்களும் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் வசித்து வருகின்றனர்.
இவர்களில் தற்போது 44 குடும்பங்கள் மீள்குடியேற பிரதேச செலகத்தில் விண்ணப்பித்த போதும் அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
அத்துடன் 2000ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை இப் பகுதியில் இராணுவ முகாம் காணப்பட்டமையால், அதன் பாதுகாப்புக்கு என அமைக்கப்பட்ட மண் அரண்கள் முழுமையாக அகற்றப்படாத நிலையில் காணப்படுகின்றது.
இங்கு ஏதாவது வெடி பொருட்கள் இருக்கும் என்ற அச்சத்தினால் தமது காணிகளை துப்பரவு செய்வதற்கும் முடியவில்லை.
இதேவேளை, புதிதாக புகையிரத பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளமையால் எமது பகுதிக்கான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.
அத்துடன் கிணறுகள் துர்நாற்றம் வீசுவதால் அதற்குள் ஏதாவது இருக்குமா? என்றும் சந்தேகமும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
எனவே சம்பந்தப்பட்டவர்கள் எமது மீள்குடியேற்றத்திற்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten