[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 02:30.52 PM GMT ]
மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பௌத்த விகாரைகளும், பிக்குகளும் இருக்கின்ற பிரதேசங்களில் எந்த விதமான பிரச்சினைகளும் எழுவதில்லை. அந்த பிரச்சினைகளுக்கு விகாரைகளில் தீர்வுகள் காணப்படுகின்றன.
ஆனால் விகாரைகள் எந்ததெந்த இடங்களில் இல்லையோ அந்தந்த இடங்களிலேயே அதிக பிரச்சினைகள் காணப்படுகின்றன.
எனவே எதிர்வரும் காலத்தில் நாட்டின் எல்லா பிரதேசங்களிலும் விகாரைகளை நிர்மாணித்து, பௌத்த பிக்குகளை அங்கு தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்கு ஆட்களைக் கடத்தியதாக இலங்கையர் மீது குற்றச்சாட்டு
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 02:21.28 PM GMT ]
பிரித்தானியாவிற்கு சட்டவிரோதமாக ஆட்களைக் கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக இலங்கையர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் பிறந்து தற்போது பிரித்தானியாவின் க்ரோடிடொன் பிரதேசத்தில் வாழ்ந்து வரும் 50 வயதான சுப்ரமணியம் விக்னராஜா என்பவரே சட்ட விரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
குறித்த நபர் கடந்த புதன்கிழமை லண்டன் - லுடோன் மற்றும் இசெக்ஸ் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர், இலங்கையர்களை சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்கு கடத்தும் நடவடிக்கைகளில் ஈடுட்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவருடன் சேர்த்து மேலும் 11 கைது செய்யப்பட்டுள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten