தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 25 mei 2013

பாரிய விலை கொடுத்தே சுதந்திரத்தைப் பெற்றோம்!- வெற்றி விழாவில் சவேந்திர சில்வா

தமக்கும் உதவ அமைச்சர் பசில் ராஜபக்ச முன் வரமாட்டாரோ!- ஏங்கி நிற்கும் பன்னங்கண்டி கிராம மக்கள்
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 10:25.02 AM GMT ]
எவ்வித அபிவிருத்தியுமற்ற நிலையில் மக்கள் அவல வாழ்க்கை வாழும் கிளிநொச்சி மாவட்டத்தின் கிராமங்களான பன்னங்கண்டி, பரந்தன் சிவபுரம் ஆகிய கிராமங்களுக்கும் வந்து தமது நிலைமைகளை நேரில் பார்த்து ஆராய்ந்து தமக்கும் உதவ அமைச்சர் பசில் முன் வரமாட்டாரோ என இக்கிராம மக்கள் ஏங்கி நிற்கின்றார்கள்.
கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி நிலைமைகள் பற்றி ஆராய்வதற்காக எதிர்வரும் 28ம் திகதி கிளிநொச்சிக்கு வரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ எவ்வித அபிவிருத்தியுமற்ற நிலையில் மக்கள் அவல வாழ்க்கை வாழும் கிளிநொச்சி மாவட்டத்தின் கிராமங்களான பன்னங்கண்டி, பரந்தன் சிவபுரம் ஆகிய கிராமங்களுக்கும் வந்து தமது நிலைமைகளை நேரில் பார்த்து ஆராய்ந்து தமக்கும் உதவ அமைச்சர் முன் வரமாட்டாரோ என இக்கிராம மக்கள் ஏங்கி நிற்கின்றார்கள்.
கிளிநொச்சி மாவட்டத்திலே அரசினால் வழங்கப்பட்ட எந்தவொரு வீட்டுத்திட்டமும் இக்கிராமங்களில் வசிக்கும் எவருக்குமே இதுவரை வழங்கப்படவுமில்லை, வழங்குவதற்கான நடவடிக்கைகள் கூட மேற்கொள்ளப்படாது இக்கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.
மீள்குடியமர்வு இடம்பெற்று நான்கு வருடங்கள் ஆகின்ற போதிலும் மீள்குடியமர்ந்த ஆரம்ப காலங்களில் கற்காலிகமாக வசிப்பதற்கென வழங்கப்பட்ட தறப்பாள், தகரக் கொட்டகைகளிலேயே தற்போதும் அவலப்படுகின்றார்கள்.
மழை வெள்ளம், வெய்யில், காற்று போன்ற இயற்கைக் காரணிகளால் பழுதடைந்த தற்காலிக கொட்டகைகளில் வசிக்கும், இக்கிராமங்களின் மக்கள் பெரும் கஸ்ரப்பட்டு அவலப்படுகின்றார்கள்.
தற்போது கிளிநொச்சியில் வீசுகின்ற பலமான காற்றுக் காரனமாக பன்னங்கண்டி, சிவபுரம் ஆகிய கிராமங்களிலுள்ள மக்களது தற்காலிக வாழ்விடங்கள் பல தூக்கி வீசப்பட்டுள்ளதால் பெரும் அவலப்பட்டுத் துன்பப்படுகின்றார்கள்.
பன்னங்கண்டி, சிவபுரம் ஆகிய கிராமங்களில் பெருமளவான மக்கள் வாழ்கின்ற போதிலும் இக்கிராமங்களின் அபிவிருத்தி உட்கட்டமைப்பு வேலைகள் ஏதுவும் மேற்கொள்ளப்படாது புறக்கணிக்கப்பட்டே வருகின்றது.
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி பற்றி ஆராய வரும் அமைச்சர் பசில் ராஜபக்ஸ அபிவிருத்தியில் புறக்கணிக்கப்பட்டு வரும் இக்கிராமங்களுக்கும் வருகைதந்து தமது நிலைமையை நேரில் பார்த்து தெரிந்துகொண்டு அவல வாழ்க்கை வாழும் தமக்கும் உதவ முன்வரமாட்டாரோ என ஏங்கி நிற்கின்றார்கள்.

பாரிய விலை கொடுத்தே சுதந்திரத்தைப் பெற்றோம்!- வெற்றி விழாவில் சவேந்திர சில்வா
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 11:22.22 AM GMT ]
பெரியளவிலான விலையைக் கொடுத்தே இலங்கையின் சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டோம் என ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டு நான்கு ஆண்டு வெற்றி விழா நியூயோர்க்கில் நடைபெற்றது.
அந்த நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்கு பாரியளவிலான விலை கொடுத்துள்ளோம். அதற்காக உயிர்த்தியாகம் செய்தவர்களை மறந்து விடக் கூடாது.
அத்துடன் யுத்தத்தின் போது உயிர் மற்றும் உடல் உறுப்புக்களை இழந்து நாட்டைப் பாதுகாப்பதற்கு போராடிய அனைவருக்கும் நன்றி பாராட்ட வேண்டியது அவசியமானது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten