தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 25 mei 2013

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட 21 இலங்கைத் தமிழ் அகதிகள் கேரளாவில் கைது!

யாழில் வெசாக் தினத்தை முன்னிட்டு பசுக்களை வழங்கிய இராணுவத்தினர்
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 10:24.36 AM GMT ]
யாழ்ப்பாணத்தில் வெசாக் தினத்தையொட்டி எட்டு குடும்பங்களுக்கு படையினரால் பசு மாடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
511ஆவது படையணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு, யாழ்ப்பாணம் மானிப்பாய் மருதடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் 511 ஆவது படையணின் கட்டளைத் தளபதி ஜெனரல் சமரசிங்க மற்றும் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க ஆகியோர் பசுக்களை வழங்கி வைத்தனர்.

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட 21 இலங்கைத் தமிழ் அகதிகள் கேரளாவில் கைது
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 09:48.14 AM GMT ]
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா தப்பிச் செல்ல முற்பட்ட 21 இலங்கை அகதிகள் இந்தியாவின் கேரளா மாநிலத்தின் ஏர்ணாகுளம் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக கியூ பிரிவு பொலிஸார் மற்றும் கேரளா பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றி வளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின்படி இந்த சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
7 ஆண்கள், 6 பெண்கள் மற்றும் 8 சிறுவர்கள் நியூ கொச்சின் பகுதி ஹோட்டல் ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் சென்னையிலிருந்து ரயில் மூலமாக கேரளா சென்றுள்ளனர்.
சுபாஸ் எனப்படும் முகவர் இவர்கள் ஒவ்வொருவரிடமிருந்து தலா ஒரு லட்சம் ரூபா பணத்தை நேற்று வியாழக்கிழமை  மாலை பெற்றுக் கொண்டதாக தெரியவந்துள்ளது.
தமிழகத்திலுள்ள நான்கு முகாம்களைச் சேர்ந்த அகதிகளே இவ்வாறு பிடிபட்டுள்ளனர்.
இவர்கள் மீன்பிடி படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டுள்ளனர். சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டபோது முகவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் இன்று வெள்ளிக்கிழமை சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
தமிழகத்திலிருந்து கடல் வழியாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட சுமார் 60 பேர் இந்த மாதம் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவற்துறையினா் தெரிவித்துள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten