[ திங்கட்கிழமை, 06 மே 2013, 07:34.18 AM GMT ]
யாழ்.நாவாந்துறை பொம்மை வெளிப் பகுதியிலே இந்த சிசு மீட்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்கள் அதிகமாக இருக்கும் இந்தப் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட சிசுவானது, வெள்ளைத் துணி ஒன்றினால் போர்க்கப்பட்டு பற்றை ஒன்றுக்குள் வீசப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் யாரும் கைது செய்யப்பட வில்லை. அத்தோடு இச்சிசுவை வீசி எறிந்த தாயார் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கையின் நல்லிணக்கத்திற்காக ஈழத்தமிழர் இரத்தம் சிந்தியுள்ளனர்: கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர்
[ திங்கட்கிழமை, 06 மே 2013, 08:09.19 AM GMT ]
இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்பதற்காக விலைமதிப்பற்ற உயிர்த் தியாகங்களை ஈழத்தமிழர் செய்துள்ளனர். 1940 களிலிருந்து இன்றுவரை தமிழர் சிந்திய இரத்தம்தான் இலங்கையிலும் உலகத்திலும் சிங்கள மக்களுக்கு வாழ்வைக் கொடுத்திருக்கிறது என கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர் சு.தயாபரன் தெரிவித்துள்ளார்.
கனடா மறுவாழ்வு அமைப்பின் உதவியுடன் கடந்த 2012ம் ஆண்டு ஆவணி மாதம் கிளிநொச்சி வன்னேரிக்குளத்தில் ஆரம்பிக்கப்பட்ட தையல் பயிற்சி நிலையத்தில் நிறைவு விழாவும் தைத்த ஆடைகளின் கண்காட்சியும் நேற்று முன்தினம் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடந்து உரையாற்றுகையில்,
இன்று எங்கள் நிலத்தில் நாம் வாழ முடியாதுள்ளது. இந்த நிலையத்திற்கு கூட பிரசுரம் ஒட்டி அடாத்தாகப் பிடிக்கும் ஒரு அநியாயமான சூழலில் நாம் வாழ்கிறோம்.
எம்மில் நான்கு பேர் ஒன்று கூடி பேச முடியவில்லை. எங்கள் பிள்ளைகளைக்கூட எங்களால் காப்பாற்ற முடியாத இக்கட்டான நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். இதற்கு முடிவாக தமிழன் தன்னைத் தான் ஆளுகின்ற நிலை வேண்டும். இந்த நாள் தான் எங்கள் இனத்திற்கான நிம்மதியான நாளாகவும் அமையும் என்றார்.
வன்னேரிக்குளம் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவி வனிதா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், கிளிநொச்சி மாவட்ட கிளையின் செயலாளரும் ஓய்வுநிலை கிராம அலுவலருமான சு.பசுபதிப்பிள்ளை, கட்சியின் அக்கராயன் பிரதேச அமைப்பாளர் சர்வானந்தன், கட்சியின் செயற்பாட்டாளர் மகேஸ்வரன் உட்பட தையல் பயிற்சி ஆசிரியை, பயிற்சி நெறியை முடித்துக் கொண்ட மாணவர்கள், வன்னேரிக்குளம் மாதிரிக் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Geen opmerkingen:
Een reactie posten