ஜனாதிபதியாகும் ஆசை இல்லை!- கட்சி உறுப்பினர்கள் என்னுடன் தொடர்பு கொள்வதை மகிந்த விரும்பவும் இல்லை: சந்திரிகா
[ திங்கட்கிழமை, 06 மே 2013, 06:35.03 AM GMT ]
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார். தற்போது போதுமான சமுக சேவைகளில் ஈடுபட்டு வருகிறேன். எனக்கு அதிகார ஆசை இல்லை.
தனுஷ்கோடியை சேர்ந்த 20 மீனவர்களை இன்று அதிகாலை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து அரசியலில் இருந்துதான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று இல்லை. நான் என்னுடையை கடமையை செய்துவிட்டதாக கருதுகிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தாம் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகி, இலங்கை அரசியலில் இருந்தும் விலகியதன் பின்னர், கடந்த ஏழு வருடங்களின் தமக்கு கீழ் இருந்த எந்த ஒரு அமைச்சரோ உறுப்பினரோ தம்மோடு பேசவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் முதுகெலும்பற்றவர்களாக இருப்பதாகவும், கடந்த ஏழு வருடங்களில் தன்னிடம் பலர் ஒரு வார்த்தையேனும் பேசவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தம்மிடம் இருந்து மதிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர், கட்சியின் உறுப்பினர்களை யாரையும் என்னுடன் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று பணித்திருந்ததாகவும் சந்திரிகா தெரிவித்துள்ளார்.
தனுஷ்கோடியை சேர்ந்த 20 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது
[ திங்கட்கிழமை, 06 மே 2013, 07:27.43 AM GMT ]
இராமேசுவரம் மற்றும் பாம்பன் பகுதிகளிலிருந்து கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினர் அடிக்கடி பிடித்து கைது செய்து வந்தனர்.
ஏற்கனவே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் 30 பேர் இன்னும் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை தனுஷ்கோடியை சேர்ந்த 20 மீனவர்கள் 2 நாட்டுப் படகுகளில் கடலில் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
அவர்களை எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Geen opmerkingen:
Een reactie posten