தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 6 mei 2013

ஆந்திராவில் கைதான இலங்கை மீனவர்கள் அந்த ஊர் காரர்களை தாக்கி மக்கள் பதில்த் தாக்குதல்!


இந்தியாவுக்கு எதிரான கடுமை போக்கு - எல்.ஐ.ஓ.சியின் எண்ணெய் களஞ்சியம் பறிப்பு
[ திங்கட்கிழமை, 06 மே 2013, 03:07.20 AM GMT ]
இலங்கை - இந்திய எரிபொருள் கூட்டுத்தாபனத்துக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட பத்து வருடங்கள் பழமையான உடன்படிக்கைகளை இலங்கை தற்போது ரத்து செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்திருந்தமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி இந்திய எரிபொருள் கூட்டுத்தாபனமும், இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் என்பன இணைந்து, திருகோணமலையில் உள்ள எண்ணெய் களஞ்சியத்தை நீண்டகால பாவனைக்கு உட்படுத்தும் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி இருந்தன.
எனினும் அதன் பின்னர் இந்த களஞ்சியம் அரசாங்க சொத்து என்பதால், இதில் இல்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் கைச்சாத்திட முடியாது என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், களஞ்சியத்தின் உரிமை இந்திய எரிபொருள் கூட்டுத்தாபனத்துக்கு 35 வருட குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்தது.
எனினும் தற்டுபோது இந்த உடன்படிக்கையை ரத்து செய்து, அங்குள்ள களஞ்சிய சாலைகளில் இலங்கையின் எரிபொருள் நிறுவனம் ஒன்றையும் தமது எண்ணெய்இறுப்பை களஞ்சியப்படுத்த அனுமதித்தால் மாத்திரமே இந்திய எரிபொருள் கூட்டுத்தாபனத்துக்கு தொடர்ந்து இந்த எண்ணெய் களஞ்சியத்தை பாவிக்க அனுமதிக்கப்படும் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும் இந்த அறிவிப்புக்கு இல்கை - இந்திய எரிபொருள் கூட்டுத்தாபனம் இசைந்துள்ளதாகவும், விரைவில் இது தொடர்பான உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளப்படும் என்றும் அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 ஆந்திராவில் கைதான இலங்கை மீனவர்கள் அந்த ஊர் காரர்களை தாக்கி மக்கள் பதில்த்  தாக்குதல்!
[ திங்கட்கிழமை, 06 மே 2013, 12:53.36 AM GMT ]
இலங்கை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினர் பொதுமக்கள். ஆந்திர மாநிலம் காகிநாடா அருகே இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி புகுந்து மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 11 பேர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர்.
இந்திய கடலோரக்காவல் படையால் கைது செய்யப்பட்ட அவர்கள் பின்னர் காக்கிநாடா மரைன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அவர்கள் 11 பேரும், தும்முலாபேட்டையில் 2 காவலர்கள் பாதுகாப்புடன் ஒரு வீட்டில் வைக்கப்பட்டிருந்தனர்.
மின்சாரம் இல்லாத நேரத்தில், அவர்கள் அனைவரும் காற்று வாங்குவதற்காக வெளியே சென்று இருக்கிறார்கள்.
அப்போது, அவர்கள் அந்த ஊர் காரர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து அந்த ஊர் மக்கள் சேர்ந்து இலங்கை மீனவர்களுக்கு தர்ம அடி கொடுத்திருக்கிறார்கள்.
பொதுமக்கள் தாக்கியதில் 3 பேர் காக்கிநாடா அரசு மருத்துவமனையி்ல் சேர்க்கப்பட்டனர். மற்ற 8 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது என பொலிஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
முன்னதாக பிடிபட்ட மற்ற 14 இலங்கை மீனவர்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐதராபாத் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten