தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 9 mei 2013

ரஜனி,கமல், விஜய், சரத்குமார் போன்ற நடிகர்களின் திரைப்படங்களை இறக்குமதி செய்ய விசேட அனுமதி?


முன்னாள் போராளிகளின் மறு வாழ்வுக்காகவே அரசியலில் குதிக்கின்றேன்!- தயா மாஸ்டர்
[ வியாழக்கிழமை, 09 மே 2013, 11:14.29 AM GMT ]
முன்னாள் போராளிகளின் மறு வாழ்வுக்காகவே அரசியல் களத்தை தான் தெரிவு செய்துள்ளதாக தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்
இன்று வியாழக்கிழமை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசிய போது இவ்விடையத்தை வெளிப்படையாக கூறினார்
எனது அரசியல் சிலருக்கு சிரிப்பாக இருக்கலாம். இருந்தும் தமிழ் மக்கள் காலம் காலமாக ஏமாற்றப்பட்டு வந்த பம்மாத்து அரசியலை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும். அத்தோடு அடிதடி அரசியல் வாதிகளின் ஏமாற்று வேலைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே அரசியல் களத்தில் குதிக்கின்றேன்.
உண்மையில் தமிழ் மக்கள் விரும்புகின்ற அரசியலை என்னால் கொடுக்கமுடியும். முன்னாள் போராளிகளின் மறுவாழ்வு, அவர்களின் விடுதலை, அவர்களது குடும்பப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவே இந்த சந்தரப்பத்தை தான் பயன்படுத்தவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
யாழில் நடைபெறும் பம்மாத்து அரசியலை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் உண்மையில் மக்களின் தேவைகளைப்புரிந்து கொண்டு அவர்களுக்காக அர்பணிப்புடன் செயற்படுபவர்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டும்.
வடமாகாண சபை தேர்தலுக்கான வேலைத்திட்டங்கள் வகுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த வடமாகாண சபைத் தேர்தலில் புலிகளின் முன்னாள் அரசியல் துறையைச் சேர்ந்தவர்கள் பலர் அரசியல் வேலைத்திட்டங்களின் தங்களை இணைத்துக் கொள்ள இருக்கின்றனர்.
வடமாகாண சபைத் தேர்த்தலில் சமனான பங்கு ஆசனங்களை அரசு பெறுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைத்தாலும் அவர்களின் நிலைப்பாடு தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் எனற நிலையை தான் ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.


ரஜனி,கமல், விஜய், சரத்குமார் போன்ற நடிகர்களின் திரைப்படங்களை இறக்குமதி செய்ய விசேட அனுமதி?
[ வியாழக்கிழமை, 09 மே 2013, 02:05.28 AM GMT ]
தென் இந்தியாவின் பிரபல திரை நட்சத்திரங்களான ரஜனிகாந்த், கமல்ஹாசன், விஜய், சரத்குமார் போன்ற நடிகர்கள் நடித்த திரைப்படங்களைள இலங்கையில் இறக்குமதி செய்வதற்கு விசேட அனுமதி பெற்றுக் கொள்ளப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பௌத்த பிக்குகள் அமைப்புக்களின் ஒன்றான ரவணா பலயவின் அழுத்தம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலங்களில் குறித்த நடிகர்கள் நடித்த திரைப்படங்ளை இறக்குமதி செய்ய அமைச்சரவையின் அனுமதி பெற்றுக் கொள்ளப்பட உள்ளதாக இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் அசோக சேரசிங்க தெரிவித்துள்ளார்.
விஜய், ரஜனிகாந்த், கமல்ஹாசன் மற்றும் சரத் ஆகிய நடிகர்களின் நடிப்பில் வெளியாகும் தென்னிந்திய திரைப்படங்களை இறக்குமதி செய்யக் கூடாது என ராவணா பலய அமைப்பு, இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்திடம் எழுத்து மூலம் கோரியுள்ளது.
எதிர்வரும் காலங்களில் இந்த நடிகர்களின் திரைப்படங்களை இறக்குமதி செய்ய அமைச்சரவையின் அனுமதி பெற்றுக் கொள்ளப்படும் எனவும், அதன் பின்னரே இலங்கையில் இந்தத் திரைப்படங்கள் திரையிடப்படும் எனவும் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் அசோக சேரசிங்க, ராவணா பலய அமைப்பிற்கு எழுத்து மூலம் உறுதியளித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten