தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 9 mei 2013

எமது கூட்டமைப்பில் முன்னாள் பயங்கரவாதிகள் சிலர் :இரா !


இலங்கையில் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட அரசியல் கூட்டணியான, தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்ய முடியாது என்று கூறியுள்ள கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், “எமது கட்சியில் முன்னாள் பயங்கரவாதிகள் உள்ளனர். அதை அரசியல் கட்சியாக பதிவு செய்தால் மற்றையவர்கள் எம்மை மதிப்பார்களா ?” என்று கேட்டுள்ளார்.

இந்த கூட்டமைப்பில் உள்ள ஈ.பி.ஆர்.எல்.எப்., டெலோ ஆகிய இயக்கங்கள், கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய வேண்டும் என்று கோருகின்றன. அதன் தலைவரான இரா.சம்பந்தன், முடியாது என மறுத்து வருகிறார். அவர் கூறுகையில், “இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த காலம்முதல் ஜனநாயக அரசியலில் ஈடுபட்டவர்கள் நாம். இடைப்பட்ட காலத்தில் ஆயுதம் ஏந்திய இயக்கங்களாக செயல்பட்டு, இலங்கை அரசால் பயங்கரவாதிகளாக அடையாளம் காட்டப்பட்ட இயக்கங்களை எம்முடன் இணைத்து ஒரு கட்சியாக பதிவு செய்தால், அதன்பின் உலகம் எம்மை பரிகாசிக்காதா ? எமக்கும் பயங்கரவாதிகள் என்ற முத்திரை விழாதா ? சட்ட ரீதியாக இதெல்லாம் சாத்தியமில்லை. இலங்கை அரசியல் அமைப்பு சட்டம் அனுமதிக்காது” என்கிறார்.

சரி.. இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கி, இதே சம்பந்தனை தலைவராக்கியது விடுதலைப் புலிகள் இயக்கம் அல்லவா ? அவர்கள் அகிம்சாவாதிகள் என இலங்கை அரசால் அடையாளம் காட்டப்பட்டவர்களா ? இல்லை விடுதலைப் புலிகள் இயக்கம் முதல் கொண்டு அனைத்து தமிழ் போராட்டக் குழுக்களையும் இவர் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்த நினைக்கிறாரா ? புலிகளால் உருவாக்கப்பட்ட இக் கூட்டமைப்பே கடந்த காலங்களில், பெரும் வெற்றியை ஈட்டிய ஒரே தமிழர் அமைப்பு. சுமார் 22 பாராளுமன்ற உறுப்பினர்களை வென்ற அமைப்பு. தற்போது சம்பந்தன் ஐயா அவர்கள், போரட்ட இயக்கங்களை பயங்கரவாதிகள் என்று கூறுவது மிகவும் கண்டிக்கப்படவேண்டிய விடையம். அப்படி என்றால் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அரசு என்ன நல்லவர்களா ?


Geen opmerkingen:

Een reactie posten