[ வியாழக்கிழமை, 09 மே 2013, 02:36.43 AM GMT ]
பிரித்தானியர் ஒருவர் இலங்கையில் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதியின் புதல்வர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்திருந்த கருத்துக்கு, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் சைமன் டன்சக் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பிலான சந்தேக நபர் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் தமக்கு தெரியவில்லை என்றும், எனினும் கண்டிப்பாக குறித்த நபர் விரைவில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்றும் நாமல் ராஜபக்ஸ பி.பி.சிக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
இதனை வரவேற்றுள்ள பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர், உறுதியான கருத்துக்களை வழங்குவதே சிறந்த அரசியலுக்கு அழகு என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை இலங்கையின் பெயருக்கு இந்த கொலை சம்பவம் கழகங்கத்தை ஏற்படுத்தி விட்டிருப்பதாகவும், இதனை நீக்குவதற்கு உரிய முறையில் நீதி செயற்பாடுகளை இயக்க வேண்டும எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ் நகரில் பெண்ணிடம் பணம் திருட்டு! 3 இளைஞர்கள் மீது விசாரணை
[ வியாழக்கிழமை, 09 மே 2013, 11:18.08 AM GMT ]
யாழ். நகரில் பெண்ணிடமிருந்து பணத்தைத் திருடினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நகரில் ஊதுபத்தி விற்கும் 3 இளைஞர்களை நகரப் பொலிஸார் பிடித்து விசாரணைக்குட்படுத்தியுள்ளனர். யாழ். பஸ் நிலையப் பகுதியில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
வவுனியாவிலிருந்து யாழ். நகருக்கு ஊதுபத்தி விற்கும் குறித்த இளைஞர்கள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நேரம் அருகிலுள்ள பால்சாலையில் பால் குடித்துவிட்டு பெண்ணொருவர் 2000 ரூபா பணத்தைக் கொடுக்கவே கடைக்காரர் 1000 ரூபா கொடுத்து விட்டு மிகுதிப் பணத்தை சரிபார்த்துக் கொண்டிருக்கையில் குறித்த பெண் அந்த 1000 ரூபாவை தனது கைப்பையினுள் வைத்து விட்டு மிகுதிப் பணத்தை கடைக்காரரிடமிருந்து பெற்று மீண்டும் பைக்குள் வைக்க முயன்ற போது பையிலிருந்த 1000 ரூபாவைக் காணவில்லை.
சம்பவ நேரம் இந்த இளைஞர்களில் ஒருவர் குறித்த பெண்ணின் அருகில் நின்றிருந்த நிலையிலேயே இந்தப் பணத்தை அந்த இளைஞர் எடுத்திருப்பார் என்று நகரப் பொலிஸாரிடம் முறையிடப்பட்டதையடுத்தே இந்த இளைஞர்கள் மூவரையும் நகரப் பொலிஸார் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten