தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 7 mei 2013

கச்சதீவை மீள பெறும்வரை மீனவர்களின் பிரச்சனை தீர்க்கப்படமாட்டாது!


யுவதியை கடத்திச் சென்று நான்கு நாட்கள் மறைத்து வைத்திருந்த சிவில் பாதுகாப்பு படை வீரர் கைது
[ செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 10:13.59 AM GMT ]
28 வயது யுவதியை கடத்திச் சென்று நான்கு நாட்கள் காட்டிலுள்ள குடிசையொன்றில் மறைத்து வைத்திருந்த சிவில் பாதுகாப்பு படை வீரரொருவரையும் அவருக்கு உதவிய நபரொருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யுவதியை கடத்திச் செல்ல உதவிய மற்றுமொரு சிவில் பாதுகாப்பு படை வீரரொருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
கடத்தப்பட்ட யுவதி நொச்சியாகம, குடாவௌ பகுதியைச் சேர்ந்தவரெனவும் குடும்ப சுகாதார தாதியாக பயிற்சியை முடித்துக் கொண்டு நியமனத்தை எதிர்பார்த்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரான சிவில் பாதுகாப்பு படை வீரர் நொச்சியாகம துனுமடலாவ சோதனைச் சாவடியில் கடமையாற்றுபவராவார்.
யுவதி சந்தேக நபருடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாகவும் இவரது நடத்தை பிடிக்காததால் காதல் தொடர்பை நிறுத்த முடிவு செய்திருந்ததாகவும் கடந்த 28ம் திகதி இரவு யுவதியின் வீட்டுக்குள் திருட்டுத்தனமாக நுழைந்த சந்தேகநபர் யுவதியை கடத்திச் சென்று காட்டுப்பகுதியுலுள்ள குடிசையொன்றில் மறைத்து வைத்துள்ளார்.
யுவதியின் பெற்றோர் நொச்சியாகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். பொலிஸார் மூன்று நாட்களாக தேடியும் யுவதியை கண்டு பிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் கடத்தப்பட்ட யுவதி கடந்த 3ம் திகதி தம்மை சிவில் பாதுகாப்பு படை வீரர் பலாத்காரமாக ரம்பேவெவ திருமண பதிவு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று திருமணப் பதிவு மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து திருமண பதிவு அலுவலகத்திற்கு அருகில் காத்து நின்ற பொலிஸார் சந்தேக நபரையும் அவருக்கு உதவிய நபரையும் கைது செய்தனர்

கச்சதீவை மீள பெறும்வரை மீனவர்களின் பிரச்சனை தீர்க்கப்படமாட்டாது!
[ செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 08:57.37 AM GMT ]
கச்சதீவை மீள பெறும்வரை மீனவர்களின் பிரச்சனை தீர்க்கப்படமாட்டாது. எனவே, மத்திய அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என டி.ராஜா தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா மேற்படி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் தீர்மானம், முதலமைச்சரின் கடிதம் ஆகியவற்றை மத்திய அரசு பொருட்படுத்தவில்லை என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கை தமிழர்களை மத்திய அரசு கைவிட்டு விட்டதாகவும், இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடத்தக்கூடாது என்று கனடா, அவுஸ்திரேலியா நாடுகள் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனும் இந்த மாநாடு இடம்பெறக் கூடாது என்று கூறுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராஜா தெரிவித்தார்.
ஆனால் இந்திய மத்திய அரசு எந்த கருத்தும் வெளியிடாத நிலையில், இலங்கை அரசாங்கத்திற்கு பாதகம் இல்லாமல் இந்தியா செயல்படுகிறது என்றும் அவர் கூறினார்.

Geen opmerkingen:

Een reactie posten