தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 25 mei 2013

இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க கருணாநிதி வலியுறுத்தல்

வட இலங்கை குறித்து த.தே.கூட்டமைப்பும் ஐ.நா அதிகாரியும் கிளிநொச்சியில் பேச்சு!
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 05:55.17 PM GMT ] [ பி.பி.சி ]
இலங்கையில் யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்கள் நிறைவடைந்த நிலையில் வடபகுதியின் மனிதாபிமான உதவிக்கான தேவைகள் குறித்து ஐநாவின் முக்கிய அதிகாரி ஒருவர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை இன்று கிளிநொச்சியில் சந்தித்து உரையாடியிருக்கின்றார்.
இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக இந்தச் சந்திப்பில், ஐநாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான இணைப்பு அலுவலகத்தின் தலைமை அதிகாரியாகிய அக்னஸ் அசிக்கின் ஊனியு அம்மையாரும் அவருடனான அதிகாரிகளும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், எஸ்.சிறிதரன், சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

மீள்குடியேற்றப் பகுதிகளின் நிலைமைகள் என்ன, எவ்வாறான உதவிகள் அங்கு தேவைப்படுகின்றன என்பதை நேரில் கண்டறிந்து மதிப்பிடுவதற்காக இந்த ஐநா அதிகாரி வடபகுதிக்கு விஜயம் செய்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே இவர் வடமாகாண மாவட்டங்களின் முக்கிய சிவில் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், மீள்குடியேறியுள்ள குடும்பங்கள், போரினால் பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பினர் என பலதரப்பட்டவர்களையும் சந்தித்திருக்கின்றார். அதன் பின்னர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரையும் இவர் சந்தித்திருக்கின்றார்.

இந்தச் சந்திப்பில் வடபகுதியின் முக்கிய நிலலமைகள் தேவைகள் குறித்து தாங்கள் எடுத்துக் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இதேவேளை, வடமாகாண சபைக்கான தேர்தலை நடத்தக் கூடாது, அந்த சபைக்கான அதிகாரங்களைக் குறைக்க வேண்டும், மாகாண சபை முறைமையைக் கொண்டு வந்துள்ள 13வது அரசியல் திருத்தச் சட்டத்தை இல்லாமல் செய்ய வேண்டும் என்றெல்லாம் தென்பகுதியைச் சேர்ந்த கடும்போக்கு அரசியல்வாதிகள் அண்மைக்காலமாகக் கூறி வருகின்றார்கள்.

ஆயினும் அவ்வாறு எதுவும் நடைபெறமாட்டாது. அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளாவாறாக வடமாகாண சபைக்கான தேர்தல் நடைபெறும் என அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.
அதற்குப் பின்னரும், அரச தரப்பின் அதிக அதிகாரம் வாய்ந்தவர்களில் முக்கியமானவராகிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய வடமாகாண சபைக்கான தேர்தல் நடத்துவதை எதிர்த்திருக்கின்றார்.
அந்தத் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வெற்றிபெற்றால் காணி பொலிஸ் அதிகாரங்களுடன் கூடிய தனிநாட்டு நிகழ்ச்சி நிரலைக் கொண்ட, அரசுக்கு விரோதமான நிர்வாகம் அங்கு உருவாகும் என்றும், அது தேசிய பாதகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்றும் அரசாங்கத்தை அவர் எச்சரித்திருக்கின்றார்.
இது குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு பற்றி கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், அதிகாரங்களற்ற மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்படுமானால், அதில் போட்டியிடுவது குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் என்று தெரிவித்தார்.
எனினும் அதிகாரங்களுடன் கூடிய வடமாகாண சபையைத் தக்கவைப்பதற்கான முயற்சிகளை ஏனைய எதிர்க்கட்சிகளுடன் இணைந்து தாங்கள் மேற்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க கருணாநிதி வலியுறுத்தல்
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 03:01.54 PM GMT ]
தமிழகத்தில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கேள்வி: இந்தோனேசியாவில் சிக்கியுள்ள தன் மகனை மீட்க உதவி கோரி, அவருடைய தாயார் குசலகுமாரி என்பவர் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வந்திருப்பதாகச் செய்தி ஒன்று வந்துள்ளதே?
பதில்: 2009ஆம் ஆண்டு இலங்கையில் உச்சக்கட்ட போர் நடந்தபோது, தன் மகன் துஷ்யந்தனை (வயது 26)  இந்தோனேசியாவிற்கு அவருடைய தாய் குசல குமாரி அனுப்பி வைத்திருக்கிறார்.
அங்கிருந்த அவருடைய மகன் பத்திரமாக இந்தோனேசியாவிற்கு வந்து விட்டதாகவும், அங்கிருந்து அவுஸ்திரேலியாவுக்கு படகில் கூடவந்த ஒன்பது தமிழர்களுடன் செல்லவிருப்பதாகவும் தொலைபேசியில் தெரிவித்திருக்கிறார்.
அதற்குப் பிறகு நான்காண்டுகளாக எந்தச் செய்தியும் மகனிடமிருந்து கிடைக்கவில்லையாம். கடந்த நான்காண்டுகளாக மகன் எங்கேயிருக்கிறான் என்று தேடி பலரிடம் உதவி கேட்டும் சோர்ந்து போயிருந்த நிலையில், தற்செயலாக இலங்கையில் வெளிவரும் நாளிதழில் தன் மகனின் புகைப்படத்தைப் பார்த்திருக்கிறார்.
அந்தப் புகைப்படம், இலங்கையிலிருந்து இந்தோனேசியா வந்துள்ள அகதிகளின் படம். அதிலே தனது மகன் துஷ்யந்தன் இருந்ததைப் பார்த்துவிட்டு, அந்தச் செய்தியைப் படித்த போது, இந்தோனேசியா சிறையில் அந்த ஈழத் தமிழர்கள் வாழ்வதாகவும், அவர்களுக்கு கரப்பான் பூச்சிகளே உணவாகக் கொடுக்கப்படுகிறது என்றும் எழுதப்பட்டிருப்பதைப் பார்த்து விட்டு, எப்படியாவது சிறையிலிருந்து அவர்களை மீட்க வேண்டுமென்ற எண்ணத்தோடு அந்தத் தாய் தமிழகத்திற்கு வந்திருப்பதாகவும் செய்தி படித்தேன்.
அந்தத் தாயின் துயரத்தையும், இந்தோனேசியாவில் உள்ள மற்ற ஈழத் தமிழர்களின் துயரத்தையும் தீர்க்க இந்திய அரசும், தமிழக அரசும் உரிய முயற்சிகளை எடுக்க வேண்டும்; எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.
26-9-2009 அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் திமுக நிறைவேற்றிய 8வது தீர்மானத்தில், தமிழகத்திலே அகதிகளாக தங்கியுள்ள 1 இலட்சத்திற்கு மேற்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமைச் சட்டம் மற்றும் தொடர்புடைய ஏனைய சட்டங்களின்கீழ் மறு குடியமர்த்தும் முயற்சியாக தமிழக அரசு மத்திய அரசோடு கலந்து பேசி, அவர்கள் தமிழகத்திலே நிரந்தரமாக குடியிருக்க வழிவகை செய்து தர வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தோம்.
திமுக  ஆட்சியில் இருந்தபோது தொடர் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. தற்போது அமெரிக்காவில் 2 லட்சத்து 60 ஆயிரம் இந்தியர்களுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்க முடிவு செய்திருப்பதைப் போல, இந்தியாவிலும் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமையினை - நிரந்தரமாகப் பாதுகாப்போடு வாழ்வதற்கான அனுமதியினை இந்திய அரசு வழங்கிட முன்வர வேண்டும் என்று கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இங்குள்ள ஈழத் தமிழர்களில், விரும்புவோர்க்குக் குடியுரிமை வழங்குவது, அவர்களது எதிர்காலத்திற்கு நாம் கொடுக்கின்ற உத்தரவாதமாக அமையும்.

Geen opmerkingen:

Een reactie posten