தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 5 mei 2013

ஜனாதிபதியின் புதிய பொருளாதார ஆலோசகராக தமிழர் ஒருவர் நியமனம்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முரண்பாடுகளை களைய மன்னார் ஆயர் முயற்சி
[ ஞாயிற்றுக்கிழமை, 05 மே 2013, 04:16.01 AM GMT ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை களைவதற்கு மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் முயற்சித்து வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கட்சி பதிவு தொடர்பில் கூட்டமைப்பிற்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளை களைந்து ஒற்றுமையை நிலைநாட்ட மன்னார் ஆயர் முயற்சித்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலங்கை தமிழரசுக் கட்சி கூடுதல் நலன்களை பெற்றுக் கொள்வதாக ஏனைய கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளதாக திவயின சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால் முரண்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது என தெரிவித்துள்ளது.


ஜனாதிபதியின் புதிய பொருளாதார ஆலோசகராக தமிழர் ஒருவர் நியமனம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 மே 2013, 04:18.26 AM GMT ]
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதிய பொருளாதார ஆலோசகராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி என்பவரே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்படவுள்ளார்.
பொதுநலவாய நாடுகள் செயலாளர் அலுவலகத்தின் பொருளாதார இணைப்புப் பணிப்பாளராக இந்திரஜித் குமாரசுவாமி கடமையாற்றியுள்ளார்.
உலகப் பொருளாதார அறிஞர்களில் ஒருவராக போற்றப்படும் இந்திரஜித் பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் மற்றும் சசெக்ஸ் பல்கலைக்கழகப் பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.
கலாநிதி இந்திரஜித் சுமாரசுவாமி, ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறுவர் போராளிகள் குறித்த முன்னாள் விசேட பிரதிநிதி ராதிகா குமாரசுவாமியின், சிரேஸ்ட சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது

Geen opmerkingen:

Een reactie posten