தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 3 mei 2013

புலிகளால் செய்யபட்ட கொடுமைகளை சொல்பவர் தமிழ்த்துரோகி என்றால் இவர் யார்??


சிங்களத்தில் மட்டும் அடையாள அட்டை வழங்குவதை எதிர்த்து சிங்கள இளைஞன் வழக்கு தாக்கல்!

இலங்கையில் சகல சிங்களவர்களுக்கும் தனிச்சிங்கள மொழியில் மட்டும் அடையாள அட்டை வழங்கப்பட்டிருப்பதை எதிர்த்து 18 வயதான சிங்கள இளைஞர் ஒருவர் இது அடிப்படை மனித உரிமை மீறல் என தெரிவித்து வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார்.
அத்துடன் சிங்களவர்களுக்கு தனிச்சிங்களத்தில் மட்டும் அடையாள அட்டை வழங்கப்பட்டிருப்பது இனங்காணுதல் என்னும் நோக்கத்தை மறுப்பதாக உள்ளது என்றும் அவர் தனது அடிப்படை உரிமை மீறல் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ், நிர்வாக மொழியாகவுள்ள வடக்கு-கிழக்கு பிராந்தியங்களில் வாழ்தல், வேலை செய்தல் அல்லது அங்கு போய் வருதல் என்பவற்றை கருத்தில் எடுப்பதைக்கூட இது தடுத்துள்ளது என்றும் மனுதாரரான ஏ.பி.தனஞ்சய குருகே தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கு பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், நீதியரசர்களான சலீம் மர்சூப், பிரியசத் டெப் ஆகியோர் முன்னிலையில் நேற்று வியாழக்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சிங்கள இன மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சகல அடையாள அட்டைகளிலும் உள்ள விபரங்கள் தனிச்சிங்களத்தில் மட்டுமே உள்ளன. அத்துடன் அந்த அடையாள அட்டைகளில்  அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட ஏனைய உத்தியோக, தேசிய மற்றும் நிர்வாக மொழிகள் எதுவும் இல்லை.
ஆனால் அரசியலமைப்பின் 18ம், 19வது உறுப்புரைகளின் பிரகாரம் சிங்களமும் தமிழும் இலங்கையின் தேசிய மொழிகளாகும். உறுப்புரை 22 வடக்கு கிழக்கில் தமிழ் நிர்வாக மொழியாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
எனவே, தேசிய அடையாள அட்டையில் சிங்கள மொழியில் மட்டும் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளமையானது, தமிழ் பிரதேசங்களுக்கு பயணம் செய்கின்ற வேளைகளில் தம்மை சிங்களவர் என இலகுவில் இனங்காட்டுகின்றது. இவை தனது அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாகவும் மனுதாரர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த  வழக்கு மீதான விசாரணை யூன் 20ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Geen opmerkingen:

Een reactie posten