[ செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 03:42.35 AM GMT ]
நேற்று மாலை குறித்த காட்டுக்கு விறகு வெட்டச் சென்ற பொது மக்கள் யுவதியை கண்டு பின் பத்தனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து அங்கு சென்ற பத்தனை பொலிஸார் யுவதியை மீட்டு கொட்டக்கலை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
வைத்தியசாலை அனுமதிக்கப்பட்ட யுவதி பயந்து, பேச முடியாமல் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சிகிச்சைகளின் பின் நேற்று இரவே யுவதி வீடு திரும்பியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கொட்டக்கலை பகுதியில் தனது தாய் இறந்த செய்தியை கேள்வியுற்ற மகள் அதிர்ச்சியில் ஓடிச் சென்று காணாமல் போன சம்பவம் கடந்த 6ம் திகதி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
நியூஸிலாந்துக்கு படகில் சென்ற இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவில் கரையிறங்கினர்
[ செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 03:08.49 AM GMT ]
நியூஸிலாந்துக்கு செல்லும் நோக்கில் 62 இலங்கையர்கள் அவுஸ்திரெலியாவின் மேற்கு கரையோரத்துக்கு சென்றமை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நியூஸிலாந்தின் ஹெரால்ட் பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
நியூஸிலாந்தை நோக்கி சென்ற இந்த படகு அவுஸ்திரேலியாவுக்கு அப்பால், பாதுகாப்பு மற்றும் காலநிலை காரணமாக செல்லமுடியாத நிலையில் அவுஸ்திரேலிய பிரதான நிலப்பகுதியின் கரைக்கு செலுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் இதில் 36 பேர் அவுஸ்திரேலியாவினால் இலங்கைக்கு திருப்பியனுப்பப்படடுள்ளனர்.
26 பேரின் அகதிக் கோரிக்கை பரிசீலிக்கப்படுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten