தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 7 mei 2013

முள்ளியவளை பிரச்சினைக்கு சுமூக தீர்வு!- ஹக்கீம் தெரிவிப்பு


வடக்கில் 746 சிங்களவர்களே தற்போது வாழ்கின்றனர்: சிங்களப் பத்திரிகை (செய்தித் துளிகள்-2)
[ செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 02:34.16 AM GMT ]
வடக்கில் 1800 முஸ்லிம்களும், 746 சிங்களவர்களும் வாழ்வதாக அரசாங்கத் தகவல்களை சுட்டிக்காட்டி சிங்களப் பத்திரிகையொன்று வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்னர் வடக்கில் 20000 சிங்களவர்களும், 10000 முஸ்லிம்களும் வாழ்ந்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சிங்களவர்களையும் முஸ்லிம்களையும் தமிழீழ விடுதலைப் புலிகள் விரட்டியடித்துள்ளனர்.
விட்டியடிக்கப்பட்ட சிங்கள முஸ்லிம்களின் காணிகளையும் சொத்துக்களையும் புலிகள் அபகரித்துள்ளனர் என திவயின பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படவில்லை
மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படவில்லை என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அண்மையில் அதிகரிக்கப்பட்ட மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்பட்டதாக ஆளும் கட்சி அறிவித்திருந்தது.
எனினும், மின்சாரக் கட்டணங்கள் எதிர்பார்த்தளவு குறைக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 60 அலகுகள் வரையில் பயன்படுத்தும் நுகர்வோருக்கு முழுமையான நிவாரணங்கள் வழங்கப்படவில்லை.
இதன்படி, 60 அலகுகள் வரையில் பயன்படுத்தும் நுகர்வோரின் மின்சாரக் கட்டணம் 20 வீதத்தினால் உயர்த்தப்படவுள்ளது. 90 அலகுகள் வரையில் பயன்படுத்தும் நுகர்வோருக்கு 96 அலகு வரையில் சலுகை, ஆண்டில் மூன்று தடவைகள் மட்டும் வழங்கப்பட உள்ளது.
முக்கியமான பண்டிகைகளின் போது இந்த சலுகை வழங்கப்பட உள்ளது. 90 அலகுகள் வரையில் மின்சாரத்தைப் பயன்படுத்துவோரின் மின் கட்டணம் 126 வீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
முள்ளியவளை பிரச்சினைக்கு சுமூக தீர்வு!- ஹக்கீம் தெரிவிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 02:50.50 AM GMT ]
முள்ளியவளையில் ஏற்பட்டுள்ள காணி பிரச்சினைக்கு எந்தவொரு சமூகத்திற்கும் பாதிப்பில்லாத வகையில் சுமூகமாகவும் இணக்கமாகவும் சுமூகமாகவும் தீர்வு காணப்படும் என்று நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு பிரதேசத்திற்கு நேற்று விஜயம் செய்த அவர், காணிப் பிரச்சினை தொடர்பில் முள்ளியவளை சனசமூக நிலையத்தில் நடந்த மக்கள் சந்திப்பிலும் கலந்துகொண்டு உரையாற்றும் போது இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தின் அகோரம் முடிந்து மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு படிப்படியாகத் திரும்பிக்கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் முள்ளியவளையில் காணிப் பிரச்சினை தலைதூக்கியுள்ளது.
இனங்களுக்கு இடையில் நிலவும் நல்லெண்ணமும் நல்லுறவும் பாதிக்கப்படாதவிதத்தில் பிரச்சினைக்குரிய தீர்வுகளை காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் இதன் போது தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten