[ செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 04:07.49 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இளையமகன் ரோஹித்த ராஜபக்ச நேற்று இடம்பெற்ற ரக்பி போட்டி ஒன்றின்போது போட்டி நடுவரை தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பு ஹெவலொக் மைதானத்தில் இலங்கை ரக்பி கால்பந்தாட்ட ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த 7 அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று இடம்பெற்றது.
போட்டியில் பொலிஸ் அணி, கடற்படை அணியை தோற்கடித்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதியின் இளைய மகன் ரோஹித்த கடற்படையை சேர்ந்தவர் அல்ல என்ற போதும் அவரே நேற்றைய போட்டியின் போது கடற்படை ரக்பி அணிக்கு தலைமை தாங்கினார்.
வழமையாக அவரது சகோதரரான யோசித்த ராஜபக்சவே கடற்படை ரக்பி அணிக்கு தலைமை தாங்கி வருகிறார்.
இந்தவேளையில் நேற்று தலைமை தாங்கிய ரோஹித்த, போட்டி நடுவராக செயற்பட்ட திமிரி குணசேகரவின் சட்டைக்கொலரை பிடித்து பார்வையாளர்கள் முன்னால் தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன்பின்னர் குறித்த போட்டி சுமார் 40 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு ஆரம்பிக்கப்பட்டதாக ஆங்கில செய்தி பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
பிரபாகரன் நடத்தியது கீதாசார தர்மப்போர்! சிங்களப் பேராசிரியர் குலதுங்க தெரிவிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 04:10.23 AM GMT ]
இலங்கை வரலாற்றில் எந்தவொரு போரும் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு நடைபெறவில்லையென ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக வரலாறு மற்றும் தொல்லியல்துறை பீட பேராசிரியர் ரி.ஜீ.குலதுங்க தெரிவித்துள்ளார்.
காலியில் நடைபெற்ற தொல்பொருளியல் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய பேராசிரியர் குலதுங்க, "பிரபாகரன் போரில் ஈடுபட்டது பகவத் கீதையை அடிப்படையாகக் கொண்டுதான்'' என்று குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
வரலாற்றை எடுத்துக்கொண்டால், நடந்த போர் நிச்சயமாக இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருந்திருக்காது. அது மதத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே இருந்திருக்கிறது.
துட்டகைமுனுவின் போர் கூட இனவாதத்தின் அடிப்படையில்தான் நடத்தப்பட்டதாக கடந்த பல காலங்களில் கூறப்பட்டன. ஆனால் எந்தவொரு நூலிலும், ஆவணத்திலும் எல்லாளனுக்கும், துட்டகைமுனுவுக்கும் இடையிலான போர் இனவாதத்தின் அடிப்படையில் நடந்ததென்று குறிப்பிடப்படவில்லை.
எல்லாள மன்னனைப் பற்றி மகாவம்சத்தில் 23 விதந்துரைகள் இருக்கின்றன. அதில் முதலாவது மற்றும் இறுதி விதந்துரைகளைத் தவிர ஏனைய எல்லாவற்றிலும் அவரைப்பற்றி நன்றாகத்தான் சொல்லப்பட்டுள்ளது.
நமது நாட்டைப் பொறுத்தவரை கலாசாரம்கூட இந்தியக் கலாசாரத்தையே அடியொற்றி வந்திருக்கிறது. எமது நாட்டில் போரில் ஈடுபட்ட பிரபாகரன் கூட இந்திய நூலான பகவத்கீதையின் பல விடயங்களை அடியொற்றித்தான் அதில் குதித்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார் பேராசிரியர் குலதுங்க.
Geen opmerkingen:
Een reactie posten