தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 1 mei 2013

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக வை.கே.சிங்ஹா நியமனம் !!


வடிவேல் கிருஸ்ணமூர்த்தி சவுதியின் புதிய தூதுவராக நியமனம்!வரும் 20ம் திகதி பயணமாகிறார்!
[ புதன்கிழமை, 01 மே 2013, 06:13.04 AM GMT ]
சவுதி அரேபியாவுக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள வடிவேல் கிருஸ்ணமூர்த்தி வரும் 20ம் திகதி சவுதியை சென்றடைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வெளிவிவகார அமைச்சு இத்தகவலை தெரிவித்துள்ளதாக அராப் செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் மலையகத்தை பிறப்பிடமாகக் கொண்ட வடிவேல் கிருஸ்ணமூர்த்தி முன்னர் இந்தியாவிற்கான இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராக கடமையாற்றினார்.
ரிசானா நபீக் தூக்கிலிடப்பட்ட பிரச்சினை மற்றும் சேவை காலம் நிறைவு என்பவற்றை முன்னிட்டு இலங்கைக்கான சவுதி உயர்ஸ்தானிகர் ஜவாட் திருப்பி அழைக்கப்பட்டார்.
இதனை அடுத்து சவுதிக்கான புதிய உயர்ஸ்தானிகராக வடிவேல் கிருஸ்ணமூர்த்தி நியதிக்கப்பட்டுள்ளார்.
நுவரெலியாவை பிறப்பிடமாகக் கொண்ட வடிவேல் கிருஸ்ணமூர்த்தி ஹட்டன் ஹைலன்ஸ் மத்திய கல்லூரியில் ஆரம்ப கல்வியையும் பேராதனை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பையும் அவுஸ்திரேலிய பல்கலைக்கழகம் ஒன்றில் உயர்படிப்பையும் முடித்தவராவார்.
இவர் சவுதி செல்வதற்கு முன்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திப்பார் என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக வை.கே.சிங்ஹா நியமனம் (செய்தித் துளிகள்-5)
[ புதன்கிழமை, 01 மே 2013, 08:32.43 AM GMT ]
இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக வை.கே.சிங்ஹாவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள தகவலை இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயம் உறுதிப்படுத்தியுள்ளது.
எதிர்வரும் சில தினங்களில் புதிய உயர்ஸ்தானிகர் இலங்கைக்கு விஜயம் செய்வார் என்று அந்த காரியாலயத்தின் ஊடகப் பேச்சாளர் பிரேந்தர் சிங் தெரிவித்தார்.
இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா இந்திய வெளிவிவகார அமைச்சின் கிழக்கு ஆசிய தொடர்பான செயலாளராக நியமிக்கப்பட்ட
பின்னர் உயர்ஸ்தானிகர் பதவியில் வெற்றிடம் தோன்றியது.
புதியதாக நியமிக்கப்படவுள்ள வை.கே.சிங்கா இந்திய ராஜதந்திர சேவையில் கடந்த 1981 ஆம் ஆண்டு இணைந்து கொண்டார்.
1995 ஆம் ஆண்டு இஸ்லாமாபாத்தில் இந்திய உயர்ஸ்தானிகராகவும், 2003 ஆம் ஆண்டு டுபாயில் உதவி தூதுவராகவும் அவர் செயற்பட்டுள்ளார்.
இதுதவிர, அவர் சில ஆசிய நாடுகளுக்கான தூதுவர் குழு உறுப்பினராகவும் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மின்சார கட்டணங்கள் தொடர்பான யோசனைகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு
அண்மையில் அதிகரிக்கப்பட்ட மின்சார கட்டணங்கள் தொடர்பில் நிவாரணங்களை வழங்குவதற்கான யோசனைகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
குறித்த யோசனைகளை நிதியமைச்சு மற்றும் மின்சக்தி அமைச்சு ஆகிய தயாரித்துள்ளதாக மின்சக்தி அமைச்சின் செயலாளர் வை.எம்.சி.பெர்டினாண்டோ தெரிவித்தார்.
அண்மைக்காலங்களில் இது தொடர்பில் ஜனாதிபதியுடன், மின்சக்தி அமைச்சு அதிகாரிகள் பல கட்ட பேச்சுவார்த்தைகளையும் நடத்தியிருந்தனர்.
இதன்போது, மின்சார கட்டணம் தொடர்பில் நிவாரணங்கள் வழங்கப்படும் பட்சத்தில் அது மின்சார சபைக்கும், திறைசேரிக்கும் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான நிலையில், மின்சார கட்டணம் குறித்து நெருக்கடி நிலை தோன்றியுள்ள தருணத்தில் இரவு வீதி மின்விளக்குகள் பகலிலும் ஒளிர்ந்த சம்பவம் ஒன்று
ஹிங்குராகொட நகரில் இன்று இடம்பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியாவிலிருந்து 819 இலங்கையர்கள் பலவந்தமாக நாடு கடத்தப்படவுள்ளனர்
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற 819 இலங்கையர்கள் பலவந்தமாக நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்ரேலிய இணையத்தளம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இதனிடையே, சட்டவிரோதமாக நாட்டுக்குள் பிரவேசிப்போரை, நாடு கடத்தும் செயற்பாடுகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை, அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக செல்வோரை தடுக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 3 ஆயிரத்து 286 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு அகதி முகாமை மூடுமாறு ஆர்ப்பாட்டம்
தமிழகம் - செங்கல்பட்டு அகதிமுகாமை உடன் மூடுமாறு வலியுறுத்தி நேற்று சென்னையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மக்கள் கலை இலக்கியக் கழகம் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
செங்கல்கட்டு முகாமில் இருந்த சசிகரன் அண்மையில் தற்கொலைக்கு முயற்சித்தார். இந்த நிலையில், சசிகரனை சித்ரவதை செய்து தற்கொலைக்கு தூண்டிய கியூ பிரிவு
காவல்துறையினரை கைது செய்யுமாறு, ஆர்ப்பாட்டக்கார்கள் கோரிக்கை விடுத்தனர்.
அத்துடன், செங்கல்பட்டு முகாமை உடன் மூடுமாறும், இலங்கை அகதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டகாரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தயார்!- நாமல்
பெருந்தோட்ட தொழிலாளர்களின் உரிமைகளை பெற்றுக் கொடுக்க ஜனாதிபதியும் அரசாங்கமும் தயார் எனவும் நெருக்கடிகளுக்கு உரிய தீர்வு காணப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தலவாக்கலையில் இடம்பெற்று வரும் மலையக மக்கள் முன்னணியின் மேதின பேரணியில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அபிவிருத்திக்காக நீண்டகாலமாக தங்களின் உழைப்பினை பெருந்தோட்டத் துறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் வழங்கி வருகின்றனர். அவர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது.
இந்த நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சந்திக்கின்ற அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கான நடவடிக்கைககள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்று
அவர் குறிப்பிட்டுள்ளார்.
மறைந்த தலைவர் வி.சந்திரசேகரின் மலையக மக்களுக்கான சேவைகளை மறக்க மாட்டோம் என்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten