[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 05:38.46 AM GMT ]
கடந்த சில தினங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 29 வயதுடைய தமிழ் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இவரது உடலை உறவினர்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்ற பொழுது, இடுப்பிற்கு மேல் உள்ள பகுதியில் அறுவை சிகிசைக்கு உட்படுத்தப்பட்டமைக்கான தடயங்கள் காணப்பட்டுள்ளன.
இதேபோன்று இவ்வாரம் கொழும்பில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தமிழ் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
அப்பெண்ணின் உடலை வேறொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பொழுது அவரது உடலில் இருந்த இரண்டு சிறுநீரகங்களில் ஒன்று சிகிச்சை மூலம் அகற்றப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா தூதுவரிடம் போலி ஆவணங்களைக் கொடுத்த பெண் கைது !
10 May, 2013 by admin
Geen opmerkingen:
Een reactie posten