தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 5 mei 2013

அரசாங்கத்திற்கும் முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையிலான உறவுகளில் விரிசல்


பத்திரிகை சுதந்திரத்தில் இலங்கை 162வது இடம்
[ சனிக்கிழமை, 04 மே 2013, 02:11.37 PM GMT ]
பத்திரிகை சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே 3 ம் திகதி பத்திரிகை சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் பத்திரிகை சுதந்திர அட்டவணை ஒன்றை 'ரிபோர்டர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ்' (Reporters Without Borders) என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில், பத்திரிகை சுதந்திரத்தில் இலங்கை 162வது இடத்தில் இருக்கின்றது.
இந்த அட்டவணையில் பின்லாந்து முதல் இடத்தை பெற்றுள்ளது. அட்டவணையில் இங்கிலாந்து 29வது இடத்திலும், அமெரிக்கா 32வது இடத்திலும், ரஷ்யா 148வது இடத்திலும் உள்ளன. சீனா 173வது இடத்திலும், பாகிஸ்தான் 159 ஆவது இடத்திலும் உள்ளன.
இந்தியாவுக்கு 140வது இடம் கிடைத்துள்ளது. இந்தியாவில் கடந்த 2012ம் ஆண்டு மட்டும் பத்திரிகையாளர்கள் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.

அரசாங்கத்திற்கும் முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையிலான உறவுகளில் விரிசல்
[ சனிக்கிழமை, 04 மே 2013, 02:49.36 PM GMT ]
அரசாங்கத்திற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையிலான உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கக் கூட்டணில் நீடிப்பதா இல்லையா என்பது குறித்து விரைவில் தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 7ம் திகதி இது குறித்த இறுதித் தீர்மானங்கள் எடுக்கப்பட உள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதி உயர் பீடத்தினர் கூடி இறுதித் தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு மாகாணத்தில் ஆட்சியை நடாத்த அரசாங்கத்திற்கு ஆதரவளித்த போதிலும் மாகாண முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு வழங்கவில்லை. அரசாங்கம் எமது கட்சியை உதாசீனம் செய்துள்ளது.
இதனால் ஆளும் கட்சியை விட்டு வெளியேறி எதிர்க்கட்சியில் அமர வேண்டுமென கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களும் தலைபீடத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் ஆளும் கட்சியில் இணைந்திருப்பதனால் எவ்வித பயனும் கிடையாது என கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten