[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 05:58.20 PM GMT ]
முல்லைத்தீவு பனிச்சங்குளம் பாலத்திற்குள் இருந்து துவிச்சக்கர வண்டி ஒன்றுடன் இரண்டு படையினரின் உடலங்கள் மிதந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
இவர்கள் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவேளை தவறுதலாக பாலத்திற்குள் விழுந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் இறப்பு தொடர்பில் என்ன நடந்திருக்கலாம் என்பதை எவரும் உறுதிசெய்யவில்லை.
மன்னார் பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு சவால் விடுக்கும் வகையில் பொதுபலசேனா அமைப்பு மாநாடு ஒன்றை நடாத்தத் திட்டமிட்டுள்ளதாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலைகொண்டுள்ள 54 ஆவது பிரிகேட் படையணியினை சேர்ந்த படையினர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளார்கள்.
குறித்த பாலத்திற்குள் துவிச்சக்கர வண்டி கிடப்பதை கண்டு மக்கள் காவல்துறைக்கு கொடுத்த தகவலை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இரு படையினரின் உடலங்களையும் மீட்டுள்ளார்கள்.
குறித்த படையினரின் சம்பவம் தொடர்பில் சம்பவ இடத்திற்கு கிளிநொச்சி மாவட்ட படை அதிகாரி உதயபெரேரா மாங்குளம் காவல்துறை அதிகாரி அமரசிங்க உள்ளிட்டவர்கள் சென்று பார்வையிட்டுள்ளனர்.
இரு படையினரின் உடலங்களும் கிளிநொச்சி மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனையின் பின்னர் தென்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுபலசேனா அமைப்பு மன்னார் பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு சவால்!
[ சனிக்கிழமை, 25 மே 2013, 05:33.28 AM GMT ]
கிறிஸ்தவ தலையீடுகளிலிருந்து மன்னார் மக்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளதாகவும், அதன்போது மன்னார் பேராயரின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் தமிழ் முஸ்லிம் மக்கள் தமது அமைப்பிற்கு ஆதரவளிப்பதாகவும், விரைவில் இம்மாநாடு நடத்தப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்
Geen opmerkingen:
Een reactie posten