தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 5 mei 2013

வடமராட்சி கிழக்கு மீனவர்களின் ஜீவனோபாய போராட்டம் ஆயுத முனையில் தடுப்பு


அதிகளவு வரி அறவீடு செய்யுமாறு சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்திற்கு ஆலோசனை
[ ஞாயிற்றுக்கிழமை, 05 மே 2013, 04:33.32 AM GMT ]
 அதிகளவு வரியை மக்களிடமிருந்து அறவீடு செய்யுமாறு சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
உலகின் ஏனைய நாடுகளை விடவும் இலங்கையின் அரச வருமானம் குறைவாகக் காணப்படுகின்றது என சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறுங்கால மற்றும் நீண்டகால அடிப்படையில் அரசாங்க வருமான உயர்வை மேம்படுத்தக் கூடிய பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டும்.
பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதனை விடவும் பொருளாதாரத்தை ஸ்திரதப்படுத்துவதே முதன்மையானது என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

வடமராட்சி கிழக்கு மீனவர்களின் ஜீவனோபாய போராட்டம் ஆயுத முனையில் தடுப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 05 மே 2013, 06:46.25 AM GMT ]
வடமராட்சி கிழக்குக் கட்டைக்காட்டுப் பிரதேசத்தில் தென்பகுதியிலிருந்து வந்து அடாத்தாக அட்டைப் பிடித் தொழிலில் ஈடுபடும் சிங்களவர்களுக்கு எதிராக கட்டைக்காடு கடல் தொழிலாளர்களால் நடாத்தப்பட இருந்த கண்டனப் பேரணி இராணுவத்தினரதும் ஈபிடிபியினரதும் அச்சுறுத்தலால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இன்றைய தினம் கட்டைக்காடு மீனவர் கூட்டுறவு சங்கத்தினரால் இவ்வெதிர்ப்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை.சோ.சேனாதிராசா, சி.சிறீதரன் ஆகியோரும் பங்குபற்ற இருந்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இக்கூட்டத்திற்கு வருகை தந்தால் நீங்கள் காணாமல் போவீர்கள் என அப்பகுதிக்கு பொறுப்பான இராணுவ அதிகாரியும் ஈபிடிபி அமைப்பாளர் ரங்கனும் இணைந்து இவ்வச்சுறுத்தலை விட்டிருந்தனர்.
ஆனால் தொடர்ந்தும் தென்பகுதியிலிருந்து வந்த சிங்களவர்களால் அட்டைபிடித்தலும், சங்கு பிடித்தல் தொழிலும் மேற்கொள்ளப்படுவதால் பாரம்பரியமான தங்கள் மண்ணிலே வாழ முடியாத நிர்க்கதி நிலைக்கு வடமராட்சி கிழக்கு மீனவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
2004ம் ஆண்டு சுனாமியினாலும் 2009வரை இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தாலும் இப்பகுதி மக்கள் தங்கள் உயிர்களையும் உடைமைகளையும் முழுமையான அளவில் இழந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே இவர்களின் ஜனநாயக ரீதியிலான போராட்டம் நசுக்கப்பட்ட நிலையில் கட்டாயப்படுத்ப்பட்ட இராணுவக் கட்டளைகளுக்கு அமைய தாங்கள் வழிநடத்தப்படுவதை எண்ணி விரக்தி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten