தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 26 mei 2013

அமெரிக்கா இலங்கை மீது குற்றச்சாட்டு! இரு நாடுகளுக்கிடையே இராஜதந்திர முறுகல்!


இலங்கையில் பொலிஸாரின் எதிர்ப்புக்கு மத்தியில் 1000 குதிரை வலு மோட்டார் சைக்கிள்!
[ ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2013, 03:05.37 AM GMT ]
 இலங்கையில் பொலிசாரின் எதிர்ப்புக்கும் மத்தியில், 1000 குதிரைவலு கொண்ட மோட்டார் சைக்கிள்களை சாதாரண பாதைகளில் செலுத்த அனுமதி வழங்கப்படவுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று விரைவில் வெளியிடப்படும் என்று போக்குவரத்து அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே விளையாட்டு தேவைகளுக்காக 1000 சீ.சீக்கும் அதிக எஞ்சின் வலுகை கொண்ட மோட்டார் சைக்கிள்களை வைத்திருக்க அனுமதி வழங்கி அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தது.
எனினும் இந்த அறிவித்தலின் படி, அந்த மோட்டார் சைக்கிள்களை பாதையில் செலுத்துவது தடை செய்யப்பட்டிருந்தது.
எனினும் புதிய தீர்மானத்தின்படி அவ்வாறான மோட்டார் சைக்கிள்களை சாதாரணமாக பாதையில் செலுத்த அனுமதிக்கும் வகையில், புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது.
எவ்வாறாயினும், இது பல்வேறு குற்றச் செயல்களுக்கும், வீதி விபத்துக்களுக்கும் வழிவகுக்கும் என்று போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
அமெரிக்கா இலங்கை மீது குற்றச்சாட்டு! இரு நாடுகளுக்கிடையே இராஜதந்திர முறுகல்
[ ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2013, 03:26.12 AM GMT ]
ஈரான் மீதான தடைகளை இலங்கை மீறுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர முறுகல் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற  இலங்கையின் அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த விவகாரம் குறித்து பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச பிரச்சினை எழுப்பியிருந்தார்.
இதுதொடர்பாக இலங்கை அரசாங்கத்துக்கு அமெரிக்கா தகவல் பரிமாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய மகிந்த ராஜபக்ச, இலங்கை போன்ற சிறிய நாடுகள் மீது அமெரிக்கா இத்தகைய குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக குறிப்பிட்டதுடன், ஆசியாவின் இரண்டு முன்னணி நாடுகளின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்கள் செய்தால் எந்தக் குற்றச்சாட்டும் இல்லை என்று விசனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டை பகிரங்கமாக நிராகரிக்கும்படியும் மகிந்த ராஜபக்ச அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவுக்கு உத்தரவிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த புதன்கிழமை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் அந்தக் குற்றச்சாட்டை மறுத்திருந்த போதிலும், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடவில்லை.
கடந்த 2012ம் ஜுன் மாதத்துக்குப் பின்னர் ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யப்படவில்லை என்று அனுர பிரியதர்சன யாப்பா கூறிய போதிலும், அமெரிக்காவின் எதிர்ப்புத் தொடர்பாகவோ, இலங்கை அமைச்சரவையில் இடம்பெற்ற கலந்துரையாடல் குறித்தோ அவர் எந்த தகவலையும் வெளியிடவில்லை.
இந்த விவகாரத்தில் அமெரிக்காவுடன் இழுபறி ஏற்பட்டுள்ள நிலையிலேயே, திருகோணமலையில் அமெரிக்க செயற்பாட்டு தகவல் நிலையத்தை அமைப்பதற்கு திருகோணமலை நகரசபையுடன் அமெரிக்கத் தூதரகம் செய்து கொண்ட உடன்பாடு சர்ச்சையைக் கிளப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கா இலங்கை மீது குற்றச்சாட்டு
ஈரான் மீது அமெரிக்கா விடுத்திருந்த பொருளாதார தடையை இலங்கை மீறி செயற்படுவதாக அமெரிக்கா குற்றம் சுமத்திவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர போர் ஒன்று இடம்பெற்று வருவதாக உள்நாட்டு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்த கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது பேசப்பட்டுள்ளது.
இதன்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இலங்கை அமெரிக்காவின் பொருளாதார தடையை மீறி செயற்படவில்லை என்று அமெரிக்காவுக்கு அறிவிக்குமாறு, பெற்றோலிய வளத்துறை அமைச்சரிடம் கோரியுள்ளார்.
ஆசியாவின் இரண்டு முக்கிய நாடுகள் இவ்வாறு ஈரானில் இருந்து தொடர்ந்து மசகு எண்ணெயை இறக்குமதி செய்கின்ற போதும், இலங்கை மீது மாத்திரமே அமெரிக்கா குற்றச்சாட்டை முன்வைப்பதாகவும் ஜனாதிபதி வருத்தம் வெளியிட்டதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் இது தொடர்பில் அமெரிக்கா இலங்கையுடன் தொடர்பு கொண்டு, ஈரானுடான தொடர்பு குறித்து கண்டனம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
இதேவேளை, அமெரிக்காவின் இந்த கண்டனத்துக்கு மற்றுமொரு காரணமும் கூறப்படுகிறது.
அதாவது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுகையில் உள்ள திருகோணமலை பிரதேச சபையுடன் அமெரிக் தூதரகம் மேற்கொண்டஉடன்படிக்கை தொடர்பில் விசாரணை நடத்தவிருப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்தே அமெரிக்கா இவ்வாறு இலங்கைக்கு எதிரான செயற்பாட்டை முடக்கி விட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Geen opmerkingen:

Een reactie posten