14 வருடங்களுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக நம்பப்படும் ‘லயன் எயார் – அன்டனோவ் 24′ ரக உள்ளூர் பயணிகள் விமானத்தின் சிதைவடைந்த பகுதிகளுடன் மனித எலும்புக்கூடுகள், ஆடைகள், செருப்புகள், இதயத்துடிப்புமானி மற்றும் தங்கப் பல் ஒன்றின் ஒரு பகுதி போன்றன மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான புத்திக சிறிவர்தன தெரிவித்தார்.
இதேவேளை, மேற்படி விமானத்தின் கறுப்புப் பெட்டி இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக நம்பப்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் அதனை எடுத்துச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார்.
சுழியோடிகள், கடலுக்கு அடியில் சுமார் 30 அடி ஆழத்தில் இருந்து மேற்படி விமானத்தின் பாகங்களை மீட்டுள்ளனர் என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.
Geen opmerkingen:
Een reactie posten