வடக்கில் மக்களின் காணி அபகரிக்க இரகசிய மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம்! அரசாங்கத்தின் சூழ்ச்சி திட்டம் அம்பலம்
[ புதன்கிழமை, 08 மே 2013, 02:56.45 AM GMT ]
வடக்கில் பொது மக்களின் காணிகளை இராணுவத் தேவைகளுக்காக சுவீகரிப்பை எதிர்த்து தொடர்ச்சியான போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் காணி சுவீகரிப்பிற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
இதற்காக அரசு சுவீகரிக்கவுள்ள காணிகளை மதிப்பீடு செய்யும் பணிகளை விலைமதிப்பீட்டுத் திணைக்களம் மேற்கொண்டுள்ளனதாக தெரியவருகின்றது.
இலங்கையின் முஸ்லிம் அரசியல்வாதி அசாத் சாலியை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி சர்வதேச மன்னிப்பு சபை, இணையம் மூலமான கையெழுத்து போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.
இதிலும் உண்மையான பெறுமதிக்கு காணிகளை மதிப்பீடு செய்யாது அண்ணளவாகவே காணிகளின் விலைகள் மதிப்பீடு செய்யப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
இதேவேளை காணி சுவீகரிப்பிற்கு என 400 மில்லியன் ரூபா ரூபாவையே அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்ட நிலையில் இத்தொகையானது ஒரு சிலருக்கும் நட்ட ஈடுகளை வழங்க முடியாத தொகையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இக்காணி அபகரிப்பிற்கு 5 ஆயிரம் வழக்குகளை தாக்கல் செய்ய தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவரையில் 2 ,000 பேர் இதற்காக ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர்.
அசாத் சாலியை விடுதலை செய்ய மன்னிப்பு சபை கையெழுத்து போராட்டம்
[ புதன்கிழமை, 08 மே 2013, 02:53.26 AM GMT ]
இந்தக் கோரிக்கையின் மூலம் அசாத் சாலியை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரப்படவுள்ளது.
அசாத் சாலி, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
எனினும் இலங்கை அரசாங்கம் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் எதனையும் இன்னும் சுமத்தவில்லை என்று மன்னிப்பு சபை குறிப்பிட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten