[ புதன்கிழமை, 08 மே 2013, 08:29.04 AM GMT ]
வவுனியா மாவட்டக் காணி சுவீகரிப்பு உத்தியோகத்தரால் சுவீகரிக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்து, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை இன்று கண்டனத் தீர்மானம் ஒன்றினை ஏகமனதாக நிறைவேற்றியது.
பொதுமக்களுக்குச் சொந்தமான 20 ஏக்கர் உறுதிக் காணிகளை, பொதுத் தேவைக்கு என்று அறிவிக்கப்பட்டு இலங்கை 56வது இராணுவப் பிரிவின் தலைமையகத்தினை நிறுவுவதற்காக குறித்த காணி சுவீகரிக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்தே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கைத் தீவில் இறுதிப் போரின் போது இடம்பெற்ற, சர்வதேச மனித உரிமை சட்ட மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பாக, சர்வதேச சுயாதீனமான விசாரணை நடாத்தப்பட வேண்டும் என டென்மார்க் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான இரு கட்சிகளும் அரச ஆதரவு கட்சியொன்றும் எதிர்க்கட்சியும் கூட்டிணைந்து வலியுறுத்தியுள்ளன
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுமைக்குட்பட்ட இப்பிரதேச சபையின் தவிசாளர் சிவலிங்கம் தலைமையில் இடம்பெற்ற சபையின் விசேட கூட்டத்தில், உறுப்பினர் கதிர்காமு பரமேஸ்வரன் அவர்களால் முன்மொழியப்பட்டே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காணி எடுத்தற் சட்டத்தின் ( அத்.460) 2ம் பிரிவின் கீழான அறிவித்தல் - “பேயாடிகூழாங்குளம் கிராமத்தில் 20 ஏக்கர் நிலப்பரப்பு இராணுவத்தின் தேவைக்குக் கையகப்படுத்தல்” என்று தலைப்பிடப்பட்ட இத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வவுனியா பிரதேச செயலகப் பிரிவின் நொச்சிமோட்டை கிராம அலுவலகப் பிரிவிற்குரிய பேயாடிகூழாங்குளம் கிராமத்தில் மேற்படி விடயம் தொடர்பாக வவுனியா மாவட்ட காணி சுவீகரிப்பு உத்தியோகத்தர் ந.திருஞானசம்பந்தர் என்பவரால் 02.04.2013 திகதியிடப்பட்ட பொது மக்களின் தகவலுக்காக வெளிப்படுத்துகை அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லைகள் கொண்ட எட்டு உரிமையாளர்களிற்கு உரித்துடைய 20 ஏக்கர் நிலப்பரப்பில், இலங்கை 56வது இராணுவப்பிரிவின் தலைமையகத்தினை நிறுவுவதற்கு இக்காணி சுவீகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், அக்காணியை அளக்கவும் அவை தொடர்பாகத் தேவையான நடவடிக்கைகளுக்கும் காணி சுவீகரிப்பு அலுவலரால் அதிகாரமளிக்கப்பட்டுள்ளமையானது, இந்த 20 ஏக்கருக்கு உரித்துக்காரரான எட்டுப் பேரினதும் அடிப்படை உரிமையை மறுப்பதோடு மனித உரிமை மீறும் செயற்பாடுமாகும்.
எனவே இயற்கை நீதிச்சட்டத்தை மீறும் வவுனியா மாவட்ட காணி சுவீகரிப்பு உத்தியோகத்தரின் இந்த நடவடிக்கையை இச்சபையில் கண்டனத் தீர்மானமாக நிறைவேற்ற ஆவன செய்யுமாறு இச்சபையைக் கோருவதாக அத்தீர்மானத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போர்!- சர்வதேச விசாரணையை வலியுறுத்துகிறது டென்மார்க் அரசு.
[ புதன்கிழமை, 08 மே 2013, 07:49.09 AM GMT ]
அடுத்து, இலங்கைத் தீவின் மனித உரிமை நிலவரங்களை ஐ.நா மனித உரிமையாளர் தொடர்ந்தும் கண்காணிப்பதற்கு ஏற்றவகையில், டென்மார்க் அரசு பணியாற்ற வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
அத்துடன், போரின் முடிவில் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த தமிழர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் அல்லது நீதியின் முன் நிறுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு டென்மார்க் அரசு பாடுபட வேணடும் என்பதையும் கூட்டிணைந்த கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இந்தக் கட்சிகள், மறக்கப்பட்ட மோதுகை என்ற தலைப்பில், ஈழத்தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, கடந்த ஏப்ரல் மாதம் 17ம் திகதி டென்மார்க் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மாநாட்டினை டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியத்துடன் இணைந்து ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இலங்கைத் தீவில் இறுதிப்போரின் போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச சுயாதீன விசாரணை நடாத்தப்பட வேண்டிய தேவையிருப்பதாக டென்மார்க் நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போது டென்மார்க் வெளிநாட்டமைச்சர் தெரிவித்திருந்தார்.
அத்துடன், இலங்கையில் தொடர்ந்தும் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும், ஆதலால் அதனை தடுத்து நிறுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்தின் மீதான சர்வதேச அழுத்தம் தொடர்ந்தும் பேணப்பட வேண்டியது மிக முக்கியம் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
Geen opmerkingen:
Een reactie posten