தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 7 mei 2013

யாழ். பஸ் நிலையத்தில் இளம்பெண்களுடன் நையான்டி செய்த இளைஞருக்கு தர்ம அடி!


யாழ். பஸ் நிலையத்தில் இளம்பெண்களுடன் நையான்டி செய்த இளைஞருக்கு தர்ம அடி!

நீண்ட காலமாக யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்தில் இளம்பெண்களுடனும், பள்ளி மாணவிகள் மற்றும் தனியார் கல்வி நிலைய்ம் செல்லும் மாணவிகளுடனும் அங்க சேஷ்டையிலும், பாலியல் ரீதியான வார்த்தைப் பிரயோகங்களும் மேற்கொண்டு வந்த நபருக்கு நேற்று தர்ம அடி கொடுக்கப்பட்டது.
இந்த நபர் பற்றி முன்னாள் யாழ்.மாநகரசபை உறுப்பினரான நிஷாந்தனிடம், பொதுமக்கள் செய்த முறைப்பாட்டை அடுத்து ஞாயிறு 05.05.2013 மாலை 04 மணியளவில் நேரில் சென்று அவதானித்த போது , தனியார் கல்விநிலையத்துக்கு வந்த மாணவியிடம் சில்மிஷம் புரிய முற்பட்ட போது நிஷாந்தனாலும் பொதுமக்களாலும் கையும் மெய்யுமாக பிடிபட்டு நையப்புடைக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பின்பு பொலிசாரால் கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
இவரை சோதனை செய்த பொழுது இவரது காற்சட்டைப்பையினுள் ஆணுறை ஒன்றும் கைப்பற்றப்பட்டது.
அது பற்றி விசாரித்த போது அதனை தனக்கு நெருக்கமான கடற்படை வீரரே வாங்கி வருமாறு கூறியதாக அந்த மன்மதன் கூறியுள்ளான்.
இது ஒரு ஆரம்பம் மட்டுமே. இவரைப் போல மேலும் பல ரோமியோக்கள் பற்றிய தகவல்களை மக்கள் வழங்கியுள்ளனர். அவர்களுக்கும் தர்ம அடி வழங்கப்படும் என்று நிஷாந்தன் தெரிவித்தார்.
நிஷாந்தனின் துணிச்சலை அங்கிருந்த பொதுமக்கள் மனதாரப் பாராட்டினார்கள்.
428659_247838828691304_1468942440_n-600x450942986_247838878691299_986530080_n-600x450

Geen opmerkingen:

Een reactie posten