தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 7 mei 2013

சனநாயக வழிமுறையில் இலங்கையின் இறையாண்மைக்கு சவால் விடும் நா.க.த.அரசு: இலங்கை சீற்றம்!nampidddom!!


காணாமல் போனவர் சடலமாக மீட்பு! - சந்தேக நபர்கள் 20 வயது இளைஞர்கள்! மட்டக்களப்பில் சம்பவம்
[ திங்கட்கிழமை, 06 மே 2013, 08:18.56 PM GMT ]
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கச்சக்கொடிசுவாமிமலை பகுதியில் ஒருவரை கொலைசெய்து புதைத்தது தொடர்பில் ஐந்து பேரை கொக்கட்டிச்சோலை பொலிஸார கைதுசெய்துள்ளனர்.  அவர்களுள் மூவர் 20 வயதுக்கு குறைந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
காணி துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தோர் அழுகிய நிலையில் சடலம் புதைக்கப்பட்டுள்ளதைக்கண்டு பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவந்தனர்.

இந்நிலையில் சடலம் அவரது மனைவியினால் அவரது ஆடையினைக்கொண்டு இனங்காட்டுப்பட்டுள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் கச்சக்கொடிசுவாமிமலையை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான அருளானந்தம் பரமானந்தம்(45வயது)என அடையாளங்காணப்பட்டுள்ளது.

இவர் கடந்த 21ஆம் திகதி காணாமல்போயிருந்த நிலையில் மனைவியினால் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்திலும் முறையிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 12ஆம் திகதி பணப்பிரச்சினையொன்று தொடர்பில் ஆறு பேர் இவர் மீது முறைப்பாடுசெய்திருந்ததாகவும் அது தொடர்பில் விசாரணை செய்து தீர்த்துவைத்துமுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 23ஆம் திகதி கொல்லப்பட்ட நபர் மதுபோதையில் இருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி குறித்த ஐந்துபேரும் இவரை கொலைசெய்து புதைத்துள்ளதாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் குற்றப்புலனாய்வு உத்தியோகத்தர் மொன்ரோக்கு(பி.சி.64470) கிடைத்த தகவலின் அடிப்படையில இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எம்.எஸ்.கருணாதிஸ்ஸ தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவந்தனர்.

இவர்கள் ஐந்து பேரும் களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
http://news.lankasri.com/show-RUmryFTaNbmpy.html


சனநாயக வழிமுறையில் இலங்கையின் இறையாண்மைக்கு சவால் விடும் நா.க.த.அரசு: இலங்கை சீற்றம்!
[ திங்கட்கிழமை, 06 மே 2013, 09:20.52 PM GMT ]
இலங்கையின் தமிழர் தாயகப் பகுதியில் தமிழீழ அரசு ஒன்றினை அமைக்கும் நோக்கும் இயங்குகின்றதென தெரிவித்துள்ள இலங்கை அரச ஊடகம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இலங்கையின் இறையாண்மைக்கு சவால் விடும் வகையில் செயற்படுகின்றது என தனது சீற்றத்தினை வெளிப்படுத்தியுள்ளது.
பொதுநலவாய நாடுகளின் உச்சிமாநாட்டினை இலங்கையில் நடத்தக்கூடாது என வாதிட்டவரும் கனடிய அரசினை சாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பொன்றிலேயே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மீதான சீற்றத்தினை சிங்களம் பதிவு செய்துள்ளது.

சனநாயக வழிமுறையூடக இலங்கைக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது சனநாயக வழிமுறையூடாக பயங்கரவாதத்தினை நிலைநிறுத்துவதற்கான முயற்சியென இலங்கை அரசு வர்ணிப்பதாக தெரிவித்துள்ள அரச ஊடகம் இத்தகைய நிலைப்பாட்டினைக் கொண்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சுதந்திரமான செயற்பாடுகளுக்கு கனேடிய அரசு ஏன் அனுமதி கொடுத்துள்ளது எனவும் கேள்வியெழுப்பியுள்ளது.

இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர் மேற்குலக நாடுகளில் சனநாயக வழிமுறையில் தேர்தல் ஊடாக உருவாக்கப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது மென்வலுவூடாக இலங்கையில் தமிழீழ அரசினை நிறுவுவதனை நோக்கமாக கொண்டு அதனுடைய அரசியல் யாப்பு அமைக்கப்பட்டுள்ளது எனும் அவ்வூடகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை தமிழீழ சுதந்திர சாசனத்தினை மையமாக கொண்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நடத்தப்பட்ட ஒன்றுகூடல் உள்ளக நிகழ்வொன்றில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டிருந்த Amnesty அமைப்பின் கனேடிய பிரதிநிதிக்கு சிங்கள அரச ஆதரவு ஊடகம் தனது சீற்றத்தினை வெளிப்படுத்தியுள்ளது என நாடு கடந்த தமிழீழ அரசு தெரிவித்துள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten