சுவிஸிலிருந்து விடுமுறைக்காக இலங்கைக்குச் சென்றவர்களுள் ஒரு சிறுமி உட்பட இன்னொரு சிறுமியும் வீதி விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சுவிஸ் சூரிச் இல் வசிக்கும் கரம்பனைச் சேர்ந்த பசுபதி ஜவீன், புங்குடுதீவை சேர்ந்த ஜெயந்திமாலா தம்பதியினர் தம் பிள்ளைகளோடு இலங்கைக்கு சென்றிருந்தனர்.
தம் விடுமுறையை கழித்துவிட்டு இன்று சுவிஸ் நாட்டுக்கு மீண்டும் திரும்ப இருந்தவேளையிலேயே நேற்று இக் கோர விபத்து நடைபெற்றுள்ளது.
இவ் விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொழும்பு வெள்ளவத்தை பகுதி வீதியில் பாதசாரிக் கடவையில் வீதியைக் கடக்க முற்பட்ட வேளையில், கார் ஒன்று மோதியதில் கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்தில் சுவிஸில் இருந்து இலங்கைக்கு சென்ற ஜவீன் ஜெயந்திமாலா தம்பதிகளின் மகள் ஜனனி(16) உயிரிழந்ததுடன், ஜவீனின் சகோதரியின் மகள் (பாலசூரியன் வாரணி (29) படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதோடு, மேலும் படுகாயமடைந்த ஜவீனின் மகன் ஜனன் (13) கொழும்பு வைத்தியசாலையில் தீவிர சிகிசைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணைகளின் போது காரை ஓட்டி வந்த சாரதி மதுபோதையில் இருந்ததனால் இக் கோர விபத்து நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஜவீன் ஜெயந்திமாலா தம்பதியினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஜனன் அவர்கள் சீக்கிரம் குணமடைய இறைவனைப் பிரார்த்திப்போமாக!
http://notice.lankasri.com/ta/obituary-20130506206157.html மேலதிக விபரங்கள் அறிய
சிறிலங்காவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை குழப்புவதற்காக விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் முயற்சித்து வருவதாக ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.
போரின் பின்னரான சிறிலங்காவில் ஏற்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்குலக நாடுகள் பார்வையிடக் கூடாது என்பதற்காகவே இதனை குழப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டால் உலகின் பல நாட்டுத் தலைவர்கள் நாட்டின் நிலைமைகளை நேரில் பார்வையிட வாய்ப்பு ஏற்படும்.
இந்த நிலைமயை தடுத்து நிறுத்தி போலிப் பிரச்சாரங்கள் மூலம் நாட்டுக்கு தொடர்ந்தும் அபகீர்த்தி ஏற்படுத்த விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் ஈடுபட்டு வருவதாக ரொஹான் குணரட்ன கண்டுபிடித்துள்ளார்.
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வரும் சிறிலங்காவில் பொதுநலவாய மாநாட்டை நடத்தக்கூடாதென பல்வேறுபட்ட நாடுகள் மற்றும் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
அத்துடன், கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளின் தலைவர்கள் பொதுநலவாய நாடுகளின் அமர்வில் கலந்து கொள்ளக் கூடாது என்ற அழுத்தங்களும் பிரயோகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten