தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 2 mei 2013

கிளிநொச்சியில் மீண்டும் வீடுவீடாகச் சென்று இராணுவப் பதிவுகள்!- மக்கள் அச்சம்!!


முதல் மனைவி இருக்க இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்தவர் யாழில் கைது
[ வியாழக்கிழமை, 02 மே 2013, 09:21.22 AM GMT ]
யாழில் முதல் மனைவி இருக்க இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்த நபர் ஒருவரை இன்று வியாழக்கிழமை யாழ். பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்.திருநல்வேலியைச் சேர்ந்த குறித்த நபர் முதலில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து அவரிடம் விவாகரத்து பெறாமல் இன்னொரு பெண்ணைத் திருமணம் முடித்து மூன்று நாளில் யாழ்.  பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்
முதல் மனைவி கொடுத்த புகாரின் பேரில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்.பொலிஸார் குறித்த நபரிடம் விசாரணை மேற்கொண்ட போது,
 பணத்திற்கு ஆசைப்பட்டு திருமணம் முடித்ததாகவும் முதலில் காதலர்களாக இருந்த பின்னர் திருமணம் முடித்ததாகவும், திருமணத்திற்காக 10 லட்சம் ரூபா சீதனமாக தான் பெற்றதாக குறித்த நபர் விசாரணையின் போது குறிப்பிட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்தனர்

கிளிநொச்சியில் மீண்டும் வீடுவீடாகச் சென்று இராணுவப் பதிவுகள்!- மக்கள் அச்சம்
[ வியாழக்கிழமை, 02 மே 2013, 11:25.28 AM GMT ]
கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இராணுவப் பதிவுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன இதனால் மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றார்கள்.
வீடுவீடாகச் செல்லும் படையினர் குடும்ப விபரங்கள் முழுவதையும் கேட்டுப் பதிவதுடன் வீட்டுக்காரர்களின் தொலைபேசி இலக்கங்களையும் கேட்டுப் பதிவு செய்து வருகின்றார்கள்.
ஏன் பதிவு செய்கின்றீர்கள் என்று மக்கள் இராணுவத்திடம் கேட்டதற்கு உங்களுக்கு நிரந்தர வீட்டுத் திட்டம் வழங்கவும், உதவித் திட்டங்கள் பல வழங்கவுமே இந்தப் பதிவுகள் என்று படையினர் மக்களிடம் கூறுகின்றார்கள்.
பதிவு என்று கூறி வீடுகளுக்கு வரும் படையினர் தனிமையில் இருக்கும் தமது பெண் பிள்ளைகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி விடுவார்களோ என்ற அச்சத்தில் கிராமங்களில் பல மக்கள் அச்சத்துடன் தமது வீடுகளில் முடங்கியுள்ளார்கள்.
கடந்த காலங்களில் பதிவு என்று சென்ற படையினர் வன்னியில் சில இடங்களில் வீட்டில் தனிமையில் இருந்த பெண் பிள்ளைகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயன்ற சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.
வீட்டுத் திட்டம், உதவித்திட்டம் என்று கூறி ஏமாற்றித்தான் வன்னியில் மக்களைக் கொண்டு சுயநலவாதிகள் பலரும் தமது நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார்கள். ஆனால் மக்கள் பலவருடங்களாக தறப்பாள் கூடாரங்களில் துன்பப்படுகின்றார்கள்.

Geen opmerkingen:

Een reactie posten