தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 2 mei 2013

இலங்கையில் பொதுநலவாய மாநாடு: பிரித்தானிய பிரதமருக்கு அழுத்தம்!


இலங்கைத் தமிழ் அகதிகள் கடத்தப்படுகிறார்கள்: இந்திய அரசாங்கம்
[ வியாழக்கிழமை, 02 மே 2013, 08:48.18 AM GMT ]
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்கு பயணம் செய்யும் இலங்கை அகதிகளை கைதுச் செய்துள்ளதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதுவரை சுமார் 1100 அகதிகளை பாதுகாப்பு படையினர் கைதுச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மக்களவையில் கருத்து வெளியிட்ட மாநிலங்கள் அவை அமைச்சர் RPN.சிங்,
"தமிழ்நாட்டு அரசிற்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்து பல இலங்கை அகதிகள் இந்தியாவிற்கு கடத்தப்படுகின்றனர்.
கடந்த 2010ம் ஆண்டு முதல் 1163 இலங்கை தமிழ் அகதிகளும் 57 இந்திய பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அவர்கள் அனைவரிற்கும் எதிராக 41 வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.
தமிழ் நாடு அரசாங்கமானது, இந்தியாவிலுள்ள அனைத்து பொலிஸ் உயர் அதிகாரிகளும் இச் செயற்பாட்டிற்கு எதிராக உரிய சட்டநடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென ஆணையிட்டுள்ளது." என அமைச்சர் சிங் தெரிவித்தார்.
இலங்கையில் பொதுநலவாய மாநாடு: பிரித்தானிய பிரதமருக்கு அழுத்தம்
[ வியாழக்கிழமை, 02 மே 2013, 09:31.02 AM GMT ]
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை புறக்கணிக்குமாறு பிரித்தானிய பிரதமர் டேவிட் கமருனுக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மனித உரிமை விவகாரங்களை கருத்திற் கொண்டு மாநாட்டை புறக்கணிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு மனித உரிமை அமைப்புக்களும் சில நாடுகளும் மாநாட்டை புறக்கணிக்குமாறு கோரி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஓர் பின்னணியில் பிரித்தானியா மாநாட்டில் பங்கேற்பது உசிதமாகாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

கமரூன் மாநாட்டில் பங்கேற்றால் அது பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களின் ஆலோசனைகளை உதாசீனம் செய்ததாக அர்த்தப்படும் என மனித உரிமை செயற்பாட்டாளர் பிரட் கார்வர் தெரிவித்துள்ளார்.


Geen opmerkingen:

Een reactie posten