தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 9 mei 2013

லண்டன் தமிழர்களை நடுத்தெருவில் விட ஆங்கில இணையம் முயற்சி !


UK Tamils urged to boycott Conservative Party

If the British Prime Minister David Cameron is not prepared to boycott CHOGM hosted by Sri Lanka setting a new global paradigm on genocide, then the UK Tamils should have the guts to demonstrate 


பிரித்தானிய மகாராணி இலங்கையில் நடைபெறும் காமன் வெலத் மாநாட்டிற்குச் செல்லவில்லை என்பது உறுதியாகியுள்ளது. அவர் தனது மகன் சாள்ஸை அனுப்பவுள்ளார். இருப்பினும் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் அவர்கள் இம் மாநாட்டிற்க்கு இலங்கைக்குச் செல்லவுள்ளார். இச் செய்தி வெளியான மறு நிமிடமே நோர்வேயில் இருந்து இயங்கிவரும் ஆங்கில(தமிழ்) ஊடகம் ஒன்று சிறுபிள்ளைத் தனமான கருத்தை வெளியிட்டுள்ளது. அதாவது பிரித்தானியத் தமிழர்கள் கான்சர்வேட்டிவ் கட்சியை(டேவிட் கமரூன் கட்சியை) ஆதரிக்கக் கூடாது என்று அது செய்திவெளியிட்டுள்ளது. தமிழர்கள் அக் கட்சியை எதிர்க்கவேண்டும் எனவும் அது மேலும் தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் தற்போது ஆட்சியில் இருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சியை தமிழர்கள் எதிர்த்தால், அதனால் என்ன விளைவுகள் உண்டாகும் என்பதனை இச் சிறுபிள்ளை ஊடகவியலாளர்கள் உணரவில்லை.

இது இவ்வாறு இருக்க, நடைபெறவிருக்கும் மாநாட்டிற்கு டேவிட் கமரூன் அவர்கள் செல்லக்கூடாது என்று கோரும் ஒரு மனுவை புலம்பெயர் செயல்பாட்டாளரும், அரசியல்வாதியுமான கலாநிதி அருச்சுணா அவர்கள் ஆரம்பித்து வைத்தார்கள். சுமார் 6 மாதங்களுக்கு முன்னதாக இக் கோரிக்கை மனு பிரித்தானிய அரச இணையம்(10 டவுனிங் வீதியின் உத்தியோகபூர்வ) ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அதில் வெறும் 164 கையெழுத்து மட்டுமே, போடப்பட்டுள்ளது. சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வாழும் பிரித்தானியாவில், 164 பேர் மட்டுமே பிரித்தானிய தலைமை அமைச்சர் இலங்கை செல்லக்கூட்டாது என்று கையெழுத்திட்டுள்ளார்கள். இப்படி ஒரு மனு போடப்பட்டுள்ளது, இதில் தமிழர்கள் கையெழுத்து இடவேண்டும் என்று, குறைகூறும் இவ்விணையம் ஒரு போதும் செய்தி வெளியிட்டது இல்லை. அதனை ஊக்குவிக்கவும் இல்லை. ஆனால் குறைகூற மட்டும் இவர்கள் புறப்பட்டு விடுவார்கள். இவர்களை தான் தமிழில் ஊடக சிப்பாய்கள் என்று அழைப்பது வழக்கம். 

சமீபத்தில் பிரித்தானியாவில் பிரித்தானிய தமிழர் பேரவை(BTF) இலங்கையில் காமன்வெலத் மாநாடு நடக்கக்கூடாது என்று கூறி ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. ஆனால் அது தொடர்பான எச்செய்திகளைக்கும் மேற்குறிப்பிட்ட இணையம் பிரசுரிக்கவில்லை. இப்படி ஒரு போராட்டம் நடந்ததை அப்படியே மூடி மறைத்தார்கள். இதற்கு காரணம் பிரித்தானிய தமிழர் பேரவையை அவர்களுக்கு பிடிக்கவில்லை என்பது தான். அதுபோல தற்போது இலங்கையில் நடைபெறவுள்ள மாநாட்டை பகிஷ்கரிக்கச் சொல்லி பிரித்தானியாவில் உள்ள எந்த அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுக்காமல் இருந்துவிட்டு, இபோது மட்டும் பிரித்தானிய தமிழ் மக்கள் கான்சர்வேட்டிவ் கட்சியைப் புறக்கணிக்கவேண்டும் என்று எழுதி என்ன பயன் இருக்கிறது. பிரித்தானியாவில் உள்ள 3 பெரிய கட்சிகளுடனும் தமிழர்கள் தொடர்ந்தும் இணைந்து வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வரவேண்டும். இன்று டேவிட் கமரூன் அவர்கள் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார் என்றால், அவருக்கு தமிழர் தரப்பில் இருந்து சரியான அழுத்தம் போகவில்லை என்பது தான் ஆதன் அர்த்தம். அதனை எவ்வாறு நிவர்த்திசெய்வது ? இனி இப்படி நடக்காமல் இருக்க நாம் என்ன செய்யவேண்டும் என்று யோசித்து நல்ல முடிவுகளை எட்டுவது நல்லது !

சிறுபிள்ளைத்தனமாக, அப்படியே கான்சர்வேட்டிவ் கட்சியை தமிழர்கள் எதிர்க்கவேண்டும் என்று எழுதும் இதுபோன்ற ஆங்கில இணையத்தின் பொறுப்பற்ற செயலை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். பேராசிரியர் பொய்லி, கரன் பாக்கர், புரூஸ் பெஃயின் . இவர்கள் 3 வரை மட்டுமே பேட்டி கண்டு போட்டு ஊடகம் நடத்தினால், குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் நிலைதான் உருவாகும். அதுமட்டும் அல்லாது பிரித்தானியத் தமிழர்களை அரசியல் அனாதைகள் ஆக்கிவிடும் நிலையும் தோன்றலாம்.

பின்குறிப்பு:

இதில் வேடிக்கையான மற்றும் வாடிக்கையான ஒரு விடையமும் உள்ளது. ஊரில்(ஈழத்தில்) உள்ள அந்த அமைப்பு சொன்னது ! இந்த அமைப்பு சொன்னது என்று இந்த ஆங்கில ஊடகம் நன்றாக எழுதுகிறது. எங்கிருந்துதான் இந்தக் கற்பனை அமைப்புகளை இவர்கள் உருவாக்குகிறார்களோ தெரியவில்லையடா சாமி !



Geen opmerkingen:

Een reactie posten