அரசாங்கம் யாழ். குடாநாட்டின் சில தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் அம்பாந்தோட்டை, லுணுகம்வெஹர ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கு அரை ஏக்கர் வீதம் காணிகளை பகிர்ந்தளித்துள்ளது. அத்துடன் அவர்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக்கொள்ள வீடமைப்பு கடனையும் அரசாங்கம் வழங்கியுள்ளது. இவர்கள் இன்னும் அங்கு குடியேறாத நிலையில் இவர்களது பெயர்கள் வாக்காளர் இடாப்புக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. வட மாகாணத் தேர்தலில் தங்கள் பலத்தை அதிகரித்துக் கொள்ளவே இந்த நடவடிக்கையை அரசாங்கம் திட்டமிட்டு நடத்துகின்றது.
இதேபோல் அமைச்சர் ரிஷாத் பதியூதீனும் தமது ஆதரவாளர்களுக்கு காணிகளை பகிர்ந்தளித்து வருகின்றார். இதுபோன்ற நடவடிக்கைகள் எதிர்காலத்தில் மிக மோசமான விளைவுகளைத் தோற்றுவிக்கும். இதனால் தமிழ், முஸ்லிம் மக்களிடையே இனக்கலவரங்கள் ஏற்படலாம்.
உண்மையிலேயே மஹிந்த அரசாங்கம் வட மாகாண சபைத் தேர்தலை நடத்த விரும்பவில்லை. இத்தேர்தலை நடத்தினால் தோல்வி நிச்சயம் என்பது அரசாங்கத்திற்குத் தெரியும். இத்தேர்தலில் தோல்வியடைந்தால் இந்த அலை மறுபுறத்திற்குப் பாயும் என்பதும் அரசாங்கத்திற்குத் தெரியும்.
தேர்தல் தோல்வியின் பின்னர் நாட்டின் நிலைமை தலைகீழாக மாறிவிடும். எனவே சர்வதேசத்திற்கு தேர்தலை நடத்துவதாகக் காட்டி தேர்தலை நடத்தாதிருக்கவே அரசாங்கம் முயற்சிக்கிறது.
Geen opmerkingen:
Een reactie posten